புதுவை கடற்கரை பாதுகாப்பு பெண் ஆய்வாளர் திருமதி.பூரணி! கலியுக நாரதர் மாத இதழ் வெளியிட்டார் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் தேவை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, தொடர்புக்கு:9443401036
புதுவை கடற்கரை பாதுகாப்பு பெண் ஆய்வாளர் திருமதி. பூரணி
இவரது நற்பண்பு மற்று நற்பணியால் இவருக்கு புதுவை மக்கள் மட்டுமல்ல வெளி மாநிலத்தவர்களும் இவருடையரசிகர்கள் வெளி மாநிலத்திலிருந்து புதுவை கடற்கரை சுற்றுலாவிற்கு வரும் பலருக்கும் இவர் முகமும் பெயரும் பரிச்சயம்

பொதுமக்களிடம் இவரை போன்று ஒரு அதிகாரியின் அணுகுமுறையை வைத்து தான் ஒட்டுமொத்த புதுவை காவல்துறை கண்ணியமும் மாண்பும் வெளி மாநிலத்தவர்களால் மதிப்பிடு செய்யப்படுகிறது என்றால மிகையாகாது
வார இறுதியில் கடற்கரையில் சுற்றுலா வாசிகளால் உள்ளூர் வாசிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், உள்ளூர் வாசிகளால் சுற்றுலா வாசிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் தைரியமாக சென்று தட்டிக் கேட்டு அப்பிரச்சனையை அங்கேயே சுமுகமாக தீர்த்து வைக்க கூடிய கைதேர்ந்த அனுபவசாலி

புதுவை தட்டாஞ்சாவடியில் பிறந்து அரசு பள்ளியில் பயின்றவர், தன்னுடைய ஆய்வாளர் பணியின் 36 ஆம் வருடத்தில் இருக்கிறார்
காலம் டிஜிட்டலாகி விட்டது, பொது மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்கம் முகம் காட்டும் காவல் அதிகாரிகளை தான் இனி மக்கள் விரும்புவர் கொண்டாடுவர்
அவ்வகையில் என்றும் புதுவை மக்களின் வரவேற்ப்புக்கும், கொண்டாடத்திற்க்கும் தகுதியுடையவர் இந்த கடற்கரை காவல் ராணி.



