புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த வேலுச்சாமி கடந்த 2019 ஆம் ஆண்டு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதன் அடிப்படையில் குடிபோதையில் மனைவி லதாவை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 20000 ரூபாய் அபராதம் விதித்தும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு...

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த வேலுச்சாமி (45), இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லதா என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இரண்டு நிலையில் வேலுச்சாமி அடிக்கடி குடித்துவிட்டு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு ஈடுபட்டு வந்ததாகவும்,  

 இதனால் அவரது மனைவி லதா தனது தந்தை வீட்டிற்கு சென்று தங்கி விராலிமலையில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் வேலை பார்த்த கடைக்குச் மது போதையில் சென்ற வேலுச்சாமி அசிங்கமான வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தியதில் 

  லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவாளி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும் விதித்தது.

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்