லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தென்காசி RTO அலுவலகத்தில் ₹37,800, திருநெல்வேலி RTO அலுவலகத்தில் ₹45,500 பறிமுதல்! கலியுக நாரதர் மாத இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீரராகவன், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர், பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும், தொடர்பு எண்:9443401036
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தென்காசி RTO அலுவலகத்தில் ₹37,800, திருநெல்வேலி RTO அலுவலகத்தில் ₹45,500 பறிமுதல்!
தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில், பல்வேறு அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி RTO அலுவலகத்தில் கணக்கில் வராத ₹37,800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி RTO அலுவலகத்தில் கணக்கில் வராத ₹45,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையின்போது அதிகாரிகள் அலுவலக ஆவணங்கள், கணினி பதிவுகள், பணப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தனர்.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையின் அடிப்படையில், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



