புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1-ந்தேதி அமல்.. ஒரு லட்சம் சம்பளம் வரை வாங்குவோருக்கு குட் நியூஸ்
புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1-ந்தேதி அமல்.. ஒரு லட்சம் சம்பளம் வரை வாங்குவோருக்கு குட் நியூஸ்
சென்னை: புதிய வருமானவரி சட்டம் கொண்டுவரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சட்டத்தின் படி தான் வருமான வரி விலக்குகள் இருக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும் புதிய வருமான வரிச் சட்டம் மிகவும் எளிமையாக இருக்கும் என்றும், சாமானியர்களுக்கு புரியும் வகையில் வார்த்தைகள் இடம் பெற்று இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த புதிய சட்டம் ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. அதன்படி, ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி இல்லை
கடந்த 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வருமான வரிச்சட்டம் தான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தில் பல்வேறு விஷயங்கள் ஆடிட்டர்களுக்கும் நிதி நிபுணர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் இருக்கும். சாமானியர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கொள்கைகள் மற்றும் விளக்கங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வருமான வரி தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள், அதனை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தடுமாறி வந்தனர்.
இந்நிலையில் மக்களுக்கு புரியும் வகையிலும், தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையிலும் புதிய வருமான வரி சட்டத்தை கொண்டுவரப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது, இதன்படி பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் வார்த்தைகளை எளிமைப்படுத்துவதற்காகவும் இந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த சட்டத்தை தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதா, நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து விட்டார்.
ஐடிஆர் ரீஃபண்ட் வார்னிங்.. வருமான வரி கட்டுவோர் டிசம்பர் 31-க்குள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை
ஐடிஆர் ரீஃபண்ட் வார்னிங்.. வருமான வரி கட்டுவோர் டிசம்பர் 31-க்குள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை
இந்த புதிய வருமானவரி சட்டம்-2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 64 ஆண்டுகால பழமையான வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக இச்சட்டம் எளிமையாக அமலுக்கு வருகிறது. இந்த சட்டப்படி, வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. அதாவது மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்டத் தேவையில்லை.
மத்திய அரசின் விருப்பம் :
வருமான வரி கட்டத்தேவையில்லை என்பதால், மக்கள் பணத்தை தாராளமான செலவு செய்வார்கள். அதிக அளவில் பொருட்களை வாங்குவதால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு நினைக்கிறது. மக்களிடம் தாராளமாக பணம் புழங்கும் போது தான் செலவு செய்வார்கள். செலவு செய்தால் தான் உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் உயரும் என்பதால் மத்திய அரசு இதனையே விரும்புகிறது.
ஜி.எஸ்.டி. குறைப்பு:
புதிய வருமானவரி சட்டத்தின் ஒரு அங்கமாக, ஜி.எஸ்.டி. வரி அடுக்குகள் 4-க்கு பதிலாக 2 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 22-ந் தேதி இது அமலுக்கு வந்தது. 375 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. எனினும் சிகரெட் மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் கலால் வரி விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பான்மசாலா, புகையிலை பொருட்கள் ஆகியவை மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் வரி விதிக்க புதிய சட்டமும் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள், மத்திய அரசு முடிவு செய்யும் தேதியில் அமலுக்கு வரும்.
தங்கம், வெள்ளி வாங்கும் சான்ஸை விட்டீங்களா? பரவாயில்லை.. 121% லாபம் தரும் உலோகம் இதுதான்! விடாதீங்க
தங்கம், வெள்ளி வாங்கும் சான்ஸை விட்டீங்களா? பரவாயில்லை.. 121% லாபம் தரும் உலோகம் இதுதான்! விடாதீங்க
ஆனால் எப்போது என்று இன்னும் அரசு அறிவிக்கவில்லை. அடுத்தகட்டமாக சுங்க வரிகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். எனவே விமானம் மற்றும் கப்பலில் வரும் சரக்குகளுக்கு சுங்க வரியும் இனி எளிமையாகும் என எதிர்பார்க்கலாம்.



