கணவருடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக காவல் ஆய்வாளர் கைது! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

கணவருடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக காவல் ஆய்வாளர் கைது! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

கணவருடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக காவல் ஆய்வாளர் கைது

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கணவருடன் நடந்து சென்றார். அப்போது ஒரு பைக்கின் பின்னால் அமர்ந்து வந்தவர் அப்பெண்ணின் உடலில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் பெண்ணிடம் சில்மித்தில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரியும் மணிமாறன் என்பதும் அவர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் தனது மைத்துனருடன் சென்று மது அருந்திவிட்டு மைத்துனர் பைக் ஓட்ட மணிமாறன் பின்னால அமர்ந்து சென்றுள்ளார்.அப்போது சாலையில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் பின்னால் தட்டியதாக தெரியவந்தது.இதையடுத்து வேளச்சேரி போலீசார் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மணிமாறனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.