புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமாட்டமான சம்பவத்தில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த புதுக்கோட்டை உறுப்பிினர் டாக்டர் வை.முத்துராஜா MBBS.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமாட்டமான சம்பவத்தில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த புதுக்கோட்டை உறுப்பிினர் டாக்டர் வை.முத்துராஜா MBBS.
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி பரவக்கோட்டையான் தெருவில் வசித்து வரும் குமரேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் சேதமடைந்த செய்தி அறிந்து அப்பகுதி தாசில்தார், விஏஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளை வரவழைத்து, அரசின் சார்பாக ஏற்பாடு செய்யவேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரணங்களை உடனடியாக வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா அறிவுறுத்தியதுடன் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கியதோடு, தீ விபத்தில் பாதிப்படைந்து ஆலங்குடி அரசு மருத்துவமயில் சிகிச்சை பெற்றுவரும் பெண்மனியை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

நிகழ்வின்போது திமுக கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் திரு தவ.பாஞ்சாலன், கழக நிர்வாகிகள் ராஜேந்திரன், காசிநாதன், பன்னீர், செழியன், மகேஷ், பாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
பத்திரிகையாளர் : வீ.வீரராகவன்



