இன்றைய தலைப்புச் செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்..

????️ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். செங்கோட்டையன் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

????️ ராமதாஸை சுற்றி துரோகிகள் இருக்கும் வரை அவருடன் சேரப்போவதில்லை. பென்னாகரத்தில் பேசிய அன்புமணி திட்டவட்டம். 

????️ மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு விஜய் பங்கேற்கும் முதல் கூட்டம்.

????️ கோவையில் பைக்கில் சென்றவரை கீழே தள்ளிய குதிரை. கீழே விழுந்தவரை கடித்து விட்டு சென்றதால் பரபரப்பு.

????️ பீகார் சட்டப்பேரவைக்கு நாளை முதற்கட்ட தேர்தல்.121 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.

????️ பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுமாறு சர்ச்சை பேச்சு. ஒன்றிய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் மீது வழக்குப்பதிவு.

????️ சத்தீஸ்கர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு. தண்டவாளத்தில் இருந்த ரயில் பெட்டிகள் அகற்றம்.

????️ தலைமுடி ஏற்றுமதியில் நடந்த 11 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு. தமிழ்நாடு, அசாம், நாகாலாந்தில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை.

????️ தெலுங்கானாவில் கனமழையால் நனைந்த சோளம், பருத்தி மூட்டைகள். விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மூட்டைகள் நனைந்ததால் பெரும் இழப்பு என வேதனை.

????️ சத்தீஸ்கரில் தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்த 4 காட்டுயானைகள். ஜேசிபி உதவியுடன் 2 குட்டிகள் உட்பட 4 யானைகளையும் மீட்ட வனத்துறை.