புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்!

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்!

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்தியாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது...

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்தியாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா (30.07.2026) 

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்...உடன் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.சுப்ரமணியன், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எஸ்.கலைவாணி, ஆதீன சந்நிதானம் திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.