7 மாதங்களுக்கு மேல் சஸ்பெண்ட் தொடர முடியாது – VAO-வை மீண்டும் பணியில் அமர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO), 7 மாதங்களுக்கும் மேலாக சஸ்பெண்டில் வைத்திருப்பது சட்டப்படி ஏற்க முடியாதது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வழக்கில் மனுதாரர் தரப்பில், நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வதற்கு எந்தச் சட்டப்பூர்வ காரணமும் இல்லை என்றும், காலவரையற்ற சஸ்பெண்ட் என்பது நியாயமற்ற நடவடிக்கை என்றும் வாதிடப்பட்டது.

இதனை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட VAO-வை உடனடியாக முக்கியத்துவம் இல்லாத (Non-Sensitive) பணியிடத்தில் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதே நேரத்தில், ஒழுங்கு நடவடிக்கை அல்லது துறை ரீதியான விசாரணையை சட்டப்படி தொடர அரசுக்கு உரிமை இருப்பதாகவும், ஆனால் விசாரணை நிலுவையில் இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு காலவரையற்ற பணியிடை நீக்கத்தை தொடர முடியாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.