தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களுக்கு... சாலை வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து, 'கலியுக நாரதர்' மாத இதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக, இளம் பத்திரிகையாளராக வளர்ந்து வரும் வீ.வீரராகவன் ஆகிய எனது வேண்டுகோள்
தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களுக்கு... சாலை வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து, 'கலியுக நாரதர்' மாத இதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக, இளம் பத்திரிகையாளராக வளர்ந்து வரும் வீ.வீரராகவன் ஆகிய எனது வேண்டுகோள்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வடவாளம் கிராம பஞ்சாயத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் நிலை பஞ்சாயத்தாக இருந்து செயல்பட்ட 'வடவாளம்', தற்போது வெறும் ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது காரணம், வடவாளம் பஞ்சாயத்தை 25 ஆண்டு காலமாக மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்கள் ராயப்பட்டி என்ற குக்கிராமத்தில் இருந்தவர்களே.
ஆனால், அந்த ராயப்பட்டி கிராமத்திற்கு சாலை வசதி இன்று வரை முற்றிலும் கிடையாது.
ஆனாலும், அஇஅதிமுக தலைமையில் தமிழக அரசு மாண்புமிகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், அந்த குக்கிரமத்திற்கு வந்து சென்றார்கள் சிலர் விபத்தில் இறந்ததற்கு அஞ்சலி செலுத்துவதற்காக.
சாலை வசதி ஏற்படுத்தி செய்து தருகிறோம் என்று அப்போது அறிவிப்பு தெரிவித்தார்கள்.
ஆனால், இன்றுவரை அதிமுக ஆட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை திமுக ஆட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது, தாங்கள் ஆட்சியிலாவது அதை நிறைவேற்றி தர வேண்டும். காரணம், பல இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் தாங்களால் நிறுத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு வாக்களித்துள்ளனர்.
ஆனால் வெற்றி பெறவில்லை! அதை ஒரு வருத்தமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் இந்த வடவாளம் பஞ்சாயத்தின் குறைகளை தீர்க்குமாறு வேண்டுகோளுடன்.
வடவாளத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீ செல்லாயி அம்மன் திருக்கோவிலைச் சுற்றி சுற்றுசுவர் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா மற்றும் போக்குவரத்து வசதி, கலையரங்கம் அமைத்து தருவதோடு வடவாளத்திலே அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ கலியுக மெய்ய ஐய்யனார் கோவிலிலும் மேம்பாட்டு வசதிகளை செய்து தரும்படியும் ராயப்பட்டி குக்கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரியும், வடவாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையம் செயல்பட்டு வந்ததுபோல் மீண்டும் அந்த காவல் நிலையம் புதுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் கவனத்தில் செயல்படும் வகையிலும்! கருவாரிப்பட்டி, செட்டியாபட்டி என 18 பட்டி குக்கிராமங்களுக்கு மேம்பாட்டு நிதிகளை ஒதுக்கி முதல் நிலை ஊராட்சியாக மீண்டும் செயல்பட பணிவான வேண்டுகோளுடன், கலியுக நாரதர் மாத இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்



