புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சி ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் 100% SUCCESS என பெயர் பெற்ற அரசுப் பள்ளி! மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் சென்று பாராட்டுக்கள் தெரிவிப்பாரா?

புதுக்கோட்டை மாவட்டம், அரமழம் ஊராட்சி ஒன்றியம், மிரட்டுநிலையில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி, தனியார் பள்ளியை மிஞ்சி செயல்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தியாக உள்ளது.

அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முதல் கடைநிலை ஆசிரியர்கள் வரை தனது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியச் செல்வங்களை போராடியாவது அவர்களின் கல்வியின் நலன் கருதி, முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்துடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவது பெற்றோர்கள் மத்தியில் மிக மகிழ்ச்சிகரமான தகவலாக உள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அலுவலர் என இருவரும் அப்பள்ளியை ஊக்கிவிக்கும் விதமாக அப்பள்ளிக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியர் முதல் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்களா? என்று மாணவ மாணவியச் செல்வங்களின் பெற்றோர்களின் நினைவலைகளாக உள்ளது!
கலியுக நாரதர் மாத இதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்: வீ.வீரராகவன்; 9443401036