தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களிலும் இன்று கணக்கில் வராத ரூ.31 லட்சம் லஞ்சப் பணம்! 41 வட்டார போக்குவரத்து அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை! அதன் எதிரொலியாக தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலகங்கள் மற்றும் பத்திரபதிவுத்துறை அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்கள், மாநகராட்சி, நகராட்சி அரசு பணியாளர்கள் என எவரவர் சிக்குவார்கள் என்று பரபரப்பாக உள்ளனர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம், கலியுக நாரதர் மாத இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீரராகவன்
தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களிலும் இன்று கணக்கில் வராத ரூ.31 லட்சம் லஞ்சப் பணம்! 41 வட்டார போக்குவரத்து அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகங்களில் அதிரடி சோதனை
தமிழகம் முழுவதும் உள்ள 41 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு (DVAC) அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், ரூ.31 லட்சத்து 85 ஆயிரம் கணக்கில் வராத ரொக்கப் பணம் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரூ.5 லட்சத்து 95 ஆயிரம் சந்தேகத்திற்குரிய ஜி-பே (GPay) பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனை பரமக்குடி, தென்காசி, கும்பகோணம், சூலூர், காரைக்குடி உள்ளிட்ட மற்றும் பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை வட்டாரப் போக்குவரத்து துறை மட்டுமல்லாது, மற்ற துறைகளிலும் குறிப்பாக வருவாய்த்துறையிலும், பத்திர பதிவு துறையிலும் ஏன் காவல்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலியுக நாரதர் மாத இதழ் வெளியீட்டாளர் மற்றும ஆசிரியர் வீ.வீரராகவன்



