வருவாய் துறையினர்களின் (7) அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை வருவாய்த்துறையினர்.

வருவாய் துறையினர்களின் (7) அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை வருவாய்த்துறையினர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி ( TNPSC) நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப் படிப்பு என மாற்றியமைக்க வேண்டும், தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்புநிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க வேண்டும், உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.!

நாள்: 30.12.2025 செவ்வாய்கிழமை மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை
இடம் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோரிக்கைகள்:
1). கிராம நிருவாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிருவாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிருவாக அலுவலகமாக அமைத்து தரக்கோருதல்.

2). கிராம நிருவாக அலுவலர்களின் TNPSC நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோருதல்.

3). கிராம நிருவாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும், இருபதாண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட கோருதல்.

4). கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிருவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாச்சாரங்களுக்கேற்ப, 30சதவீதம் என்பதிலிருந்து 50சதவீதமாக மாற்றம் செய்து, கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வுக்கான கால வரம்பை ஆறு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட கோருதல்.

5). தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க கோருதல்.

6). TSLR பட்டா மாறுதலில் கிராம நிருவாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த கோருதல்.

7). அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோருதல்.

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்.