அதிக ஒலியெழுப்பும் ஹாரன்களை புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து இதுபோன்று மீண்டும் ஹாரன்ங்கள் பயன்படுத்தப்பட்டால் அபதாரங்கள் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் காற்றை மாசுபடுத்தும் விதத்திலும் பயன்படுத்தப்பட்ட அதிக ஒலியெழுப்பும் ஹாரன்களை புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து இதுபோன்று மீண்டும் ஹாரன்ங்கள் பயன்படுத்தப்பட்டால் அபதாரங்கள் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ஓட்டுனர்களை அனுப்பி வைத்தனர் ஒரு தனியார் வாகனத்தில் பத்துக்கு மேற்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்து அலுவலர்கள் வாகனத்தின் அடியை சென்று கலட்ட கலட்ட அதிக ஒலி எழுப்பும் ஹாரன் குழாய்கள் வந்து வந்து கொண்டே இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்*
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் காற்றை மாசுபடுத்தும் விதத்திலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது என புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் சசிக்கு வந்த தகவலின் அடிப்படையில் இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் ஆலங்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் அதிரடி ஆய்வை செய்தனர் அப்பொழுது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் காற்றை மாசுபடுத்தும் விதத்திலும் அதிக ஒளி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக நிறுத்தி ஆய்வு செய்ததில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குறைந்தபட்சம் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் ஹாரன்கள் குறைந்தபட்சம் 90 டிசிபல் அளவில்தான் அதனுடைய சத்தம் இருக்க வேண்டும் ஆனால் இன்று அதிகாரிகள் ஆய்வு செய்த பொழுது தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் 101, 107 என அதிக அளவில் அதனுடைய சத்தம் டிசிபில் என கூறப்படும் அளவு அதிகமாக இருந்தது இதனை பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த கருவி மூலம் சோதனை செய்து 16 அதிக ஒலி எழுப்பும் வாகனங்களில் இருந்து 20க்கு மேற்பட்ட ஹாரன்கள் பேருந்து நிலையத்திலேயே வைத்து கழட்டப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டனர் அது மட்டும் இல்லாமல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் இது போன்று மீண்டும் பயன்படுத்தினால் கண்டிப்பாக அபதாரம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுபோன்ற அதிக ஒலி எழுப்பும் ஹாரங்கள் பயன்படுத்தபடுவதால் வயதானவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்ப்படுவதாகவும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் காற்று மாசுபடுகிறது என்ற காரணத்திற்காகவும் இது போன்ற ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை கூறும் அனுப்பி வைத்தனர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிகழ்வு பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு வந்த தனியார் பேருந்தை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது எட்டுக்கும் மேற்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது உடனடியாக வட்டார போக்குவரத்து ஊழியர் ஒருவர் பேருந்து அடியில் சென்று ஒவ்வொரு அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை கழட்டிக்கொண்டு இருந்த நிகழ்வு அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது



