புதுக்கோட்டையில் நில அளவை செய்து கொடுக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!

புதுக்கோட்டையில் நில அளவை செய்து கொடுக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நில அளவை பிரிவில் நில அளவை செய்ய ரூ.14000 லஞ்சம் பெற்ற நில அளவையரை கையும் களவுமாக மடக்கிபிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலுள்ள அரசு அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் லஞ்ச ஒழிப்பு துறையினக்கு ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல்வேறு பகுதியிலுள்ள அரசு அலுவலகங்களில் மாறுவேறுடத்தில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் திருமயம் அருகே உள்ள மலுக்கப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி பாலமுருகன் என்பவர் ஊனையூர் அருகே உள்ள வளையன்வயல் பகுதியில் தனது தாயார் பெயரில் இரண்டு பிளாட் இடத்தை வாங்கி உள்ளார்.விவசாயி பாலமுருகன் வாங்கிய அந்த இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்திருந்தநிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் நில அளவையர்‌ செல்வராஜ் என்பவரை சந்தித்து கவனிக்குமாறு தெரிவித்துள்ளார்.நில அளவையரை சந்தித்த விவசாயி பாலமுருகன் தனது இடத்தை அளவை செய்து தருமாறு கேட்டுள்ளார்.நில அளவையர் செல்வராஜ் விவசாயி பாலமுருகனிடம் ஒரு சர்வே எண்ணுக்கு 7000 வீதம் இரண்டு சர்வே எண்ணுக்கு ரூபாய் 14000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் இடத்தை அளவீடு செய்வதாக கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலமுருகன் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலமுருகன் கொடுத்து அனுப்பினர்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 14 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விவசாயி பாலமுருகன் சர்வேயர் செல்வராஜிடம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர்கள் பீட்டர் மற்றும் ஜவகர் குழுவினர் சர்வேயர் செல்வராஜை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.லஞ்சம் பெற்ற சர்வேயர் செல்வராஜை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இச்சம்பவம் திருமயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் லஞ்சம் பெற்ற சர்வேயர் செல்வராஜ் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தொகுப்பு ஊதியத்தில் பணிக்கு சேர்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.