கூலிப்படையாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தினர், ஆய்வாளராக லஞ்ச திமிரில் ஆடிய விஐயா கோல்டன் சிங் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஸ் மற்றும் IS, IO என சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை வேண்டும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவரகள், புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனது வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை சீரழித்தவர்கள் மீது ?

கூலிப்படையாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தினர், ஆய்வாளராக லஞ்ச திமிரில் ஆடிய விஐயா கோல்டன் சிங் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஸ் மற்றும் IS, IO என சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை வேண்டும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள், நீதி மன்றத்தில் பிராது கொடுக்கப்பட்டுள்ளது எனது வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை சீரழித்தவர்கள் மீது, நிலத்தின் உரிமையாளரை லாக்கப் செய்துவிட்டு, லஞ்சம் லாவண்யத்திற்கு ஆசைப்பட்டு சந்திராவிற்கு அந்த இடத்தை அபகரித்து கொடுக்கும் சூட்சமத்தில் செயல்பட்டதா? சம்பட்டிவிடுதி காவல் நிலையம்? துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டவர்களால்!

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், தெற்கு ராயப்பட்டி கிராமத்தில் ராமன் மகன் சின்னான் என்பவருக்கு பூர்வீக நிலமான சர்வே எண்: 68, பரப்பு ஐந்து ஏக்கர் இருந்தது அந்த இடத்தை அப்போது வடவாளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சந்திரா கலியமுத்து என்பவர் போலி ஆவணங்கள் தயார் செய்து போலி பட்டா மாற்றம் செய்திருந்தார், நான் எனது தாத்தாவின் பேரில் இருந்த அரசுடைமை பட்டா ஆவணங்களை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது UDR ல் பிழை திருத்தம் என விசாரணை முடித்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தான் முடியும் என்று DRO விடம் விசாரணை மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் விசாரணை நடைபெற்ற போது சந்திரா மற்றும் பிரபாகரன், ஜெயக்குமார் மற்றும் சிலர் எனது வீடு புகுந்து என் அம்மாவின் தாலியை அறுக்க வந்து, வீட்டை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர் அது தொடர்பாக சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது எனது தாயார் பெயரில் ஆனால் அப்போது சம்படிவிடுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசாரணை நடைபெற்று வந்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான் எனது தந்தை வீரையா, அண்ணன் ராஜசேகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு வெளியே வந்த போது சந்திரா மற்றும் பிரபாகரன் ஜெயக்குமார் இன்னும் இரண்டு நபர்கள் தாக்கிவிட்டு எனது தந்தையின் சட்டையை கிழித்து விட்டு ஓடிவிட்டனர் அது தொடர்பாக திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு மேற்கண்டவர்களை அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர் சந்திரா குடும்பத்தினரை மேற்கண்ட சந்திரா மற்றும் பிரபாகரன் ஜெயக்குமார் மற்றும் இரண்டு நபர்களை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தினர்.

மீண்டும் ஏப்ரல் 27/04/2026 அன்று புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணை நடைபெற இருந்த போது சந்திரா மற்றும் பிரபாகரன், ஜெயக்குமார் இவர்களின் சூழ்ச்சியால் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல், முறைப்படியான விசாரணை நடக்கும் சூழலில் சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் பணத்தை கொடுத்து என் மீது போலியாக FIR 51/2026 பதிவு செய்து விசாரணைக்கு வரவிடாமல் என்னை தடுத்து அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் செயல்பட்டுள்ளனர் சம்பட்டிவிடுதி காவல் ஆய்வாளர் விஜயா கோல்டன் சிங் அவர்களும் எவ்வித விசாரணை மேற்கொள்ளாமல் ராஜேஷ் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உண்மைக்கு புறமாக என் மீது FIR பதிவு செய்து மாபெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர் சம்பட்டிவிடுதி காவல்துறையினர் . 

பணத்தை பெற்றுக் கொண்டு என் மீது சட்டத்தை மீறி போலியாக FIR பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நிலங்கள் சம்பந்தமான அரசுடைமை பட்டா ஆவணங்கள், சந்திரா மற்றும் ஐந்து பேர்கள் மீது இரண்டு காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகாரின் மனு ரசீது, புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணை நகல் இந்த மனுடன் இனைத்துள்ளேன்.