புதுக்கோட்டை: கனரக வாகனம் போக்குவரத்து இடையூரால் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் இருவர் பலி.
புதுக்கோட்டை: கனரக வாகனம் போக்குவரத்து இடையூரால் சம்பவ இடத்தில் இருவர் பலி.

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், காயாம்பட்டி நான்கு ரோடு அருகே கீழச்செட்டியாப்பட்டியை சேர்ந்து தொழிலாளிகளான இருவர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலி.
புதுக்கோட்டை TO ஆலங்குடி, பட்டுக்கோட்டை வழி மற்றும் தஞ்சாவூர் வழியாக செல்லக் கூடிய பல மாவட்டங்களுக்கு திருட்டு மணல் மற்றும் கனிமவள பொருட்கள் திருடி செல்வதற்காக குறுக்கு வழியை திருடர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர் திருட்டு கும்பல்.

ஒரு நாளுக்கு திருட்டுத்தனமாக சுமார் 10,000 ற்கும் மேலான கனரக வாகனங்களில் இரவு பகலாக துணிச்சலாக கனிமவள பொருட்கள் திருடி வருகின்றனர் திருட்டு கும்பல்.
அந்த வடவாளம் (பிரிவு) கறம்பக்குடி சாலை மற்றும் ஆலங்குடி To புதுகை சாலை, காயாம்பட்டி 4 ரோடு பிரிவு வழிச்சாலையை பயன்படுத்தி அந்த குறுக்கு வழிச்சாலை இடையில் உள்ள 7 குக்கிராமங்களை சேர்ந்த அப்பாவி கிராம மக்கள் மற்றும் இரண்டு சக்கர வாகன போக்குவரத்து விவசாயிகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்லும் பொதுமக்களின் உயிரில் தினம் தினம் விளையாடி வருகின்றனர்.

அதன் விளைவாக இன்று உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் பலி, கிராம மக்கள் ஆவேசம்!



