புதுக்கோட்டை மாநகர காவல் துறை துணை கண்காணிப்பாளராக பிருந்தா அவர்கள் பேட்டி!
புதுக்கோட்டையில் தெற்கு நான்காம் வீதியை சேர்ந்த பல் மருத்துவர் ஆனந்த் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு திருடு போன 24 பவுன் தங்க நகைகளை நகர காவல் நிலைய காவல்துறையினர் மீட்டனர். இத்திருட்டுச் சம்பத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்கிற தனுஷ்கோடி என்ற வாலிபரை கைது செய்து அவனிடமிருந்து 24 பவுன் தங்க நகைகளை மீட்டு கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் பிருந்தா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் மக்கள் தங்கள் உடமைகளை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , வெளியூர் சென்றால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் கூடுதல் பாதுகாப்பு அளிப்போம் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பது என் முதல் பணியாகும் என்றார். எந்தப் பிரச்சனை என்றாலும் தன்னை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் டிஎஸ்பி கூறியுள்ளார். திருடு போன ஏழு நாட்களிலே திருடனை கைது செய்த போலீசாரை டிஎஸ்பி பிருந்தா பாராட்டினார். நகர் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஒயர்களை குரங்குகள் நாசப்படுத்தி விடுகின்றன அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.



