கோவிலுக்கு சொந்தமான திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றலாம் என உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் உத்தரவளித்த பிறகும் கூட, தீபமேற்றக் கூடாது என அரசு சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதாக உங்கள் அமைச்சர் திரு. ரகுபதி தெரிவித்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உங்கள் வெறுப்பரசியலுக்கு ஊரார் பணத்தை எதற்கு வீணடிக்கிறீர்கள் திரு. @mkstalin அவர்களே ?
கோவிலுக்கு சொந்தமான திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றலாம் என உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் உத்தரவளித்த பிறகும் கூட, தீபமேற்றக் கூடாது என அரசு சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதாக உங்கள் அமைச்சர் திரு. ரகுபதி தெரிவித்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் இதுவரை நீதிமன்றங்கள் வழங்கிய அனைத்து தீர்ப்புகளையும் முருகபக்தர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகமே வரவேற்கிறது. திருப்பரங்குன்ற தீபத்தூண் ஒளிர்வதில் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை. திமுகவினருக்கு மட்டும் எங்கேயோ குத்துகிறது, குடைகிறது என்றால் கோடி கோடியாக கொள்ளையடித்து சேர்த்த உங்கள் சொந்தப் பணத்தை வைத்து மேல்முறையீடு சென்று வழக்கை நடத்துங்கள் முதல்வரே! அதை விட்டு விட்டு உங்கள் வன்மத்திற்கு மக்களின் வரிப்பணத்தை எதற்கு சூறையாடுகிறீர்கள்?
ஆட்சிக்கு வந்ததில் இருந்து கண்ணில் பட்ட துறைகளில் எல்லாம் உங்கள் ஊழல் கரங்களை நுழைத்து அரசு கஜானாவை வழித்து எடுத்து விட்டீர்கள். தற்போது ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருப்பதையும் முழுதாக துடைத்தெடுக்க வழி தேடுகிறீர்களா? நீங்கள் எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும், எத்தனை வதந்திகளை பரப்பினாலும், எத்தனை பெரிய வழக்கறிஞர்களை நியமித்தாலும், திருப்பரங்குன்ற தீபத்தூண் கோவிலுக்கு சொந்தமானது என்பதையோ, காலங்காலமாக அங்கே தீபமேற்றப்பட்டதையோ உங்களால் மூடி மறைக்க முடியுமா? சொல்புத்தியும், சுயபுத்தியும் இல்லாத உங்கள் அரசுக்கு முருகபக்தர்கள் மீது அப்படியென்ன காழ்ப்புணர்வு?

இந்துமதத்தின் மீதுள்ள வெறுப்பினால் தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை பறிக்க, அதே தமிழக மக்களின் வரிப்பணத்தை லட்சக்கணக்கில் வழக்கறிஞர்களுக்கு செலவழிக்கும் உங்கள் கீழ்த்தரமான சுயநல அரசியல் அருவருக்கத்தக்கது.
publicsocialmedia.in



