கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம்

சஷ்டி விரதம் 

  பிரதமை முதல்
அடுத்த ஏழு நாட்களுக்கு 

சஷ்டி விரதம் இருக்க விருப்பப்படும் நபர்கள் 

காலை உணவுகளை தவிர்த்து 
பால் 
வாழைப்பழம் 
அல்லது ஏதாவது ஒரு பல வகைகளை எடுத்துக் கொள்ளலாம் 

மதிய உணவாக 
பச்சரிசி மூலமாக சமைக்கப்படும் சாதம் மட்டுமே உட்கொள்ள வேண்டும் 

இதற்கு குழம்பு வகைகள் 
இஞ்சி - பூண்டு - வெங்காயம் 

இதை மூன்றையும் தவிர்த்து 
சைவ காய்கறிகளை வைத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும் 

மாலை 
பால் 
வாழைப்பழம் 
அல்லது ஏதாவது ஒரு பல வகைகள் 

ஒருவேளை உணவு மட்டுமே உண்டு 

மற்ற இரு வேலைகளையும் பால் வகைகள் , இளநீர் , பல வகைகள் 
காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம் 

தினமும் காலை 
மாலை என இரு வேலையும் 
குளிர்ந்த நீரில் ( சூடு செய்யாத நீர் )
காலை மாலை என இருவேளை குளிக்க வேண்டும் 

காலை ஒருமுறை 

வீட்டின் பூஜையறையில் உள்ள 
முருகனுக்கு பூ அலங்காரம் செய்து 
தீபமேற்றி 
கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும் 

மீண்டும் இயல்பான உங்களது பணிகளை முடித்து வீட்டிற்கு வந்த பிறகு 

மீண்டும் ஒருமுறை குளித்துவிட்டு 
மாலை பூஜையில் உள்ள முருகனுக்கு விளக்கு ஏற்றி மீண்டும் ஒரு முறை கந்த சஷ்டி கவசம் அல்லது கந்த குரு கவசம் படிக்க வேண்டும் 

மாலை கந்த சஷ்டி கவசம் படித்த பிறகு 
ஒருவேளை வீட்டு அருகில் முருகன் கோவில் இருந்தால் 
கோவிலுக்கு சென்று அடுத்த ஆறு நாட்கள் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும் 

ஒருவேளை கோவில் தூரமாக இருந்தால் தவறு கிடையாது 

இந்த ஆறு நாட்கள் எதை தவிர்க்க வேண்டும் ??

# மூன்று வேளை உணவு அருந்தக்கூடாது 

# மாமிச உணவு அடுத்த ஏழு நாட்களுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது 

#  திருமணமானவர்கள் தாம்பத்திய உறவில் இருக்கக் கூடாது 

#  புகைப்பழக்கம்  கொண்டவர்கள் இந்த காலகட்டத்தில் புகை பிடிக்கக் கூடாது

# மதுப்பழக்கம் உள்ளவர்கள் இந்த காலத்தில் மது அருந்தக்கூடாது 

# குட்கா போன்ற எந்த வகை போதை பொருளும் தொடக்கூடாது 

# அடுத்த ஏழு நாட்களுக்கு இறப்பு காரியங்கள் , பெண்கள் பூப்பெய்த நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ளக்கூடாது 

#  முடிந்தவரை வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் வெளி உணவுகளை சாப்பிடக்கூடாது 

# இந்த காலகட்டத்தில் தெரியாமல் கூட எறும்பு , கொசு , எலி 
போன்ற உயிர்களை வதைக்க வேண்டாம் 

கந்த சஷ்டி விரதம் உருவான முறைகள் என்ன ?


சஷ்டி விரதம் பதிவு - 1/5