ஸ்ரீ ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன்

ஸ்ரீ ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன்
ஸ்ரீ ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன்

*மகான் ஒருவரால் புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு உருவம் கொடுக்கபட்டது*????

விரிவாக பாராப்போம்

  ????????????????????????????

*தஞ்சாவூர்* 

     *புன்னை நல்லூர்* *மாரியம்மன்*    

                    *கோயில்*   

          *தல வரலாறு*

      ????????????????????????????

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் பழமையான ஆற்றல் நிறைந்த 

திருத்தலம் ஆகும் ????

தஞ்சாவூரில் தஞ்சகன் என்கிற அசுரனை எதிர்த்துப் போர் புரிவதற்கு முன்பாக சிவபெருமான் எட்டுத் திசைகளிலும் சக்திகளை நிறுவினார்.

திசைக்கு ஒரு சக்தி எனும் விதத்தில், எட்டு சக்திகளை நிறுவி னார் சிவபெருமான். அவ்வாறு அவர் நிறுவிய அந்த சக்திகளில் கிழக்கு திசைக்கான சக்திதான் புன்னை நல்லூர் மாரியம்மன் ????

????????????????????????????

சிவபெருமான் திருவருளால் இத்தலத்திற்குச் சக்தி வந்துவிட்டார் என்றாலும், இந்த அம்மன் வழிபாட்டிற்கு வந்த காலகட்டம் கிபி 1680 ஆகும்.அந்த ஆண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான வெங்கிஜி மஹராஜ் சத்ரபதி என்பவர். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்ற வேளையில் அவர் கனவிலே அந்த சமயபுரம் மாரியம்மன் தோன்றி புன்னை மரங்கள் நடுவிலேயே தான் இருப்பதாகக் கூறி அவ்விடத்திலேயே தனக்குக் கோயில் கட்டுமாறு ஆணையிட்டார்.சித்தர்

ஜீவன்.அப்போது அம்மன் சொல்லிய இடத்தில் மன்னன் வந்து சேர்ந்தார் அங்கே அம்மன் புற்று வடிவிலிருந்தார்.

????????????????????????????

  *மகானின் சக்தி*

    -----------????-------------

*நெரூர்* 

*ஸ்ரீ சதாசிவ* *பிரம்மேந்திரர்* என்கிற மகானோடு, வெங்கோஜி மகாராஜா நெருக்கமாக இருந்தார். புன்னை நல்லூர் மாரியம்மன் திருவடிவம் வரக் காரணமாக இருந்தவர் 

*ஸ்ரீ சதாசிவ* *பிரம்மேந்திரர்* எனும் மகான்.

ஆதியிலே வெள்ளை புற்றாக இருந்த மாரியம்மனை மந்திர எந்திரங்களை நிறுவி மாரியம்மன் திருக்கோலம் கொள்ளச் செய்தார் *ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்*.

????????????????????????????

*கோடைக்காலத்தில் இந்த புன்னை நல்லூர் மாரியம்மன் முகத்திலிருந்து வியர்வை வெளிப்படுகிறது. முத்துக்களைப் போன்ற வியர்வை வருகின்ற காரணத்தால் இவருக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் என்கிற திருப்பெயர் உள்ளது.

பொதுவாக இவரை மாரியம்மன் என்று அழைக்கிறார்கள் பக்தர்கள். ஞாயிற்று

கிழமைகளில் இங்கு வந்து அம்மனை வழிபடுவது சிறப்பாகும். ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் மிகவும் சிறப்பானவை*.

அம்மனின் அபிஷேக தீர்த்தத்தால் அம்மை நோய்கள் குணமடையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதேசமயம் இங்கு வந்தால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது ???? 

*இரையை தேடுவதோடு இறையையும் தேடு*