பத்திர பதிவின் போது அசையா சொத்துக்களைப் பத்திரப்பதிவு செய்யும்போது, அந்தச் சொத்துக்கான தாய் பத்திரம், அசல் ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

இனி மூலப்பத்திரம் கட்டாயம்... சொத்து பத்திரம் பதிவு செய்ய புதிய விதிமுறை!

 அசையா சொத்துக்களைப் பத்திரப்பதிவு செய்யும்போது, அந்தச் சொத்துக்கான தாய் பத்திரம், அசல் ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

பத்திரப்பதிவின் போது, சொத்தின் அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்

பத்திர மோசடி, ஒரே சொத்தை ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு விற்பது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அசையா சொத்துக்களைப் பத்திரப்பதிவு செய்யும்போது, அந்தச் சொத்துக்கான தாய் பத்திரம், அசல் ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சட்ட திருத்தத்தின்படி, அசையா சொத்து தொடர்பான ஆவணத்தை பதிவு செய்யும் போது, சொத்தின் மீதான உரிமை உடைய முந்தைய அசல் ஆவணம் மற்றும் ஆவணம் பதிவு செய்யும் தேதிக்கு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை சமர்பிக்காத ஆவணங்கள் பதிவு செய்யப்படாது.

பதிவு செய்யும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து, அதற்கான அசல் ஆவணங்கள் இல்லாத நேரத்தில், அந்த சொத்து தொடர்பாக வருவாய் துறையால் வழங்கப்பட்ட பட்டாவை சமர்பிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த ஆவணம் பதிவு செய்யப்படாது. 

அசல் ஆவணம் தொலைந்து விட்டால், ஆவணம் தொலைந்து போனது தொடர்பான குறித்த நாளிதழில் அறிவிப்பு விளம்பரம், காவல்துறையால் வழங்கப்பட்ட கண்டறிய இயலவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.