புதுக்கோட்டை மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சார் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில், வசிப்பிடச் சான்றிதழ் வழங்கக் கோரி ஏற்பட்ட தகராறில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மீது திமுக தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கூடலிங்கம் மற்றும் அவரது மகன் வெயிலுமுத்து ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை வட்டாட்சியர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கண்மூடித்தனமாக தாக்கிய கூடலிங்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும், கிராம நிர்வாக அலுவலருக்கும் அலுவலக உதவியாளர்களாக பணி புரியும் ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்