புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் ,அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்கடன் விவசாயிகளை ஏமாற்றக்கூடிய செயலாக உள்ளது. எனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் முதல் தொடங்கி பெரிய விவசாயிகள் வரை கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரசிற்கு இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தற்போது கோடை சாகுபடி முடிந்து மாவட்டத்தில் நெல் அறுவடை நடந்து வருகிறது. இதனால் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று தமிழக அரசு ஏற்கனவே சுப்பிரமணியபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இது நாள் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் சுப்பிரமணியபுரத்தில் திறக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து ஆட்சியர் அருணா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப முதுநிலை மண்டல மேலாளரை அழைத்தார். ஆனால் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஆட்சியர் கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகளை அழைத்து விவரங்களை கேட்டார். ஆனால் அதற்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காததால் அதிகாரிகளுக்கு 17 பி சார்ஜ் அளித்து விளக்கம் கேட்க உத்தரவிட்டார்...