சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

 சென்னை காவல்துறையில் பரபரப்பு... ராயபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

  சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

  குறைந்த விலையில் தங்கக்காசுகள் மற்றும் வீட்டுமனைகள் வாங்கித் தருவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட காவலர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  இந்த புகார்களின் அடிப்படையில், சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

  இந்த மோசடி வழக்கில் மேலும் பலர் தொடர்புடையிருக்கலாம் என்பதால், காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

  காவல்துறையினரையே குறிவைத்து நடைபெற்ற இந்த மோசடி சம்பவம், சென்னை காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.