இளஞ்சிவப்பு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு...! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

இளஞ்சிவப்பு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு...!   கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 
இளஞ்சிவப்பு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை கூட்டத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு...!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இளஞ்சிவப்பு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தலைமையில்  நடைபெற்றது.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், திட்டத்தின் கீழ் குழந்தை திருமணங்களை தடுத்திடும் விதமாக குழந்தை திருமணங்கள் மற்றும் இளவயது கர்ப்பம் அதிகம் நடைபெறும் பகுதிகளில் இளஞ்சிவப்பு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இக்கிராமசபை கூட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தை பிறப்பின் முக்கியத்துவம், சுத்தம், ஆரோக்கியம், குழந்தை பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கான சம உரிமை மற்றும் வாய்ப்புகள், பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன்படி 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 21 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கும் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுத்திட சட்ட நடவடிக்கை எடுத்திடவும், மேலும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம், ஒருங்கிணைந்த சேவை மையம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் காவல் துறை ஆகிய துறைகள் மூலம் பள்ளிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக இளஞ்சிவப்பு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. உங்களுடைய தாயாக கேட்டுக் கோள்கிறேன்.    பெண் குழந்தைகள் அதிகமாக கல்வி கற்க வேண்டும். கல்விதான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உதவும்,கல்வி அவசியமான ஒன்று,  செல்போன் அதிகமாக பயன்படுத்தக்கூடாது,உங்களுடைய போட்டோவை வாட்ஸ்அப் டிபியில் வைக்க கூடாது. பெண்கள் பிரச்சினையை தெரிவித்துக் கொள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கக்கூடிய 181 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அதேபோல குழந்தை திருமணத்தை தடுக்க 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அதேபோல் இங்கு படிக்கும் மாணவிகள் வடுகப்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு போட்டித் தேர்வு  (UPSC, TNPSC) படிக்கக்கூடிய புத்தகங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இன்னும் இரண்டு தினங்களில் போட்டித் தேர்வுக்கு எதிர் கொள்ளக்கூடிய, படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் நூலகத்திற்கு தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி நேரங்களில் காலை, மாலை கூடுதல் பஸ் சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வடுகப்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு சட்டக் கல்லூரியில் படிப்பதற்கு தேர்வாகியுள்ள  மாணவிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் மே.சியாமளா,  வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு ) முத்துச்சாமி, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த  வளர்ச்சி திட்டம்) கோகுலபிரியா, விராலிமலை வட்டாட்சியர் ஜெயபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, வள்ளியம்மை, வடுகப்பட்டி ஊராட்சி செயலர் சண்முகம் மற்றும் பள்ளி மாணவிகள், கிராமப் பொதுமக்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்...