புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு! புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையால்!
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒரு விவசாயியாக தெரிவிப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது காலை 5:30 மணிக்கு ஒரு இளைஞர் சின்னா? பிணமாக ? வெட்டி கொல்லப்படுகிறார் இன்று, அதற்கு காரணம் ஒரு மதுபான கடை அதை கண்டு கொள்ளவில்லை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பட்டிவிடுதி காவல்துறை.
நெடுஞ்சாலை துறையில் செல்ல வேண்டிய வாகனங்கள் நெடுஞ்சாலையில் வழியாக செல்லாமல் உங்கள் காவல்துறையினர் வருமானங்களை ஈட்டி கொண்டு குறுக்கு வழியில் செல்லுங்கள் என்று அவர்களே கை நீட்டுவது பலரின் உயிர்களை பறித்து வருகிறது கனரக வாகனங்கள் பலமுறை!
நடக்கும் அசதும்பாவிதங்களை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை சுற்றி காட்டியும், உயர்திரு ஐயா அவர்கள், காவல் துறை கண்காணிப்பாளர் அப்படி எல்லாம் உங்களை வர்ணித்து தாங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமா மக்களின் குறைகளை?
பக்கா தெளிவாகத்தானே அனைத்து படிப்புகளும் படித்து முடித்துவிட்டு வந்துள்ளீர்கள் ஏன் தெரியவில்லை சட்டம் ஒழுங்கில் சீர்கேடும் பிரச்சனைகள்?

உங்களது கவனக்குறைவால் மட்டுமே பல உயிர் சேதங்கள் நடக்கிறது நீங்கள் அதாவது தாங்கள் உங்களது கீழ் பணியும் பணி புரியும் காவல்துறையினர்களிடம் உத்தரவு போட்டால் எப்படி மீறுவார்கள் அக்கிஸ்டுகள் (420) எதன் அடிப்படையில் இது போன்ற சட்ட ஒழுங்கீனங்கள் நடைபெறுகின்றன ஐயா நான் ஒரு சாதாரண விவசாயியாக முன் வைக்கிறேன்.

உங்களுக்கு முன்பாக இந்த மாவட்டத்தில் அருமை,பெருமையை மக்கள் தேடி வந்த சூப்பிரண்டு போலீஸ் அவர்களை தங்களுக்கு தெரியுமா?

எதற்கும் ஆசைப்படாத! சட்டம் ஒழுங்கில் பலருக்கு கஞ்சா விற்பனையாளர்களுக்கு, மதுமாது போதை விற்பனையாளர்களுக்கு என அனைவருக்கும் லத்தியை சுழற்றி லாடம் கட்டிய உங்கள் இருக்கையில் இருந்த அருண் சக்தி குமார் அவர்களிடம் சில பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் சட்டம் ஒழுங்கை எப்படி கையாள வேண்டும் என்று.



