புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (28.11.2025) அன்று அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை RED ALERT விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவும் ...

மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்

குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நிரம்பியுள்ள நீரின் இருப்புக் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புயல், வெள்ளம் சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் மின்தடையினை சரி செய்வதற்கு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்கம்பங்களும், மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன.

புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 பல்நோக்கு பேரிடர் மைய கட்டிடங்கள் மற்றும் 433 -நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை

24 மணி நேரமும்

செயல்படக்கூடிய மாவட்ட அவசரக்

கட்டுபாட்டு அறை எண் 1077,

04322-222207

ஆகிய கட்டணமில்லா

தொலைபேசி எண்களை தொடர்பு

கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு .அருணா, இ.ஆ.ப.,

அவர்கள் தகவல்