வட்டார போக்குவரத்து துறையில் பல ஆண்டுகளாக DTC, RTO, MVI என அனைத்து அலுவலர்களையும் மிரட்டி கோடிக்கணக்கில் வசூல் செய்த நெல்லை என்ற (தொல்லை) கோபாலுக்கு காப்பு கட்டுமா? தவெக அரசு!
வட்டார போக்குவரத்து துறையில் பல ஆண்டுகளாக DTC, RTO, MVI என அனைத்து அலுவலர்களையும் மிரட்டி கோடிக்கணக்கில் வசூல் செய்த நெல்லை என்ற (தொல்லை) கோபாலுக்கு காப்பு கட்டுமா? தவெக அரசு!

தமிழகம் முழுவதுமுள்ள RTO அலுவலகங்களில் மிரட்டி மாதந்தோறும் 10 லட்சம் கல்லா கட்டும் பிளாக்மெயில் மஞ்சள் பத்திரிகையாளர் NELLAI GOPAL..!

மிரட்டல்..உருட்டல்..சுருட்டல்...
தமிழகத்தில் உள்ள RTO அலுவலகங்களில் பணியாற்றிடும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் துவங்கி, மண்டல துணை போக்குவரத்து ஆணையர்கள், ஏன் சில இணை போக்குவரத்து ஆணையாளர்களையும், மிரட்டி மாத வசூலுக்காக ஆட்களை நியமித்து இரண்டு தனி கார்கள் மூலமாக தமிழகம் முழுவதும் மாதந்தோறும் 10 லட்சத்துக்கு மேல் மிரட்டி கல்லா கட்டும் போலி பிளாக் மெயில் பத்திரிகையாளர் நெல்லை கோபால். இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நோயாளி என்ற போர்வையில் மருத்துவ செலவுக்காக சில அதிகாரிகள் கருணை அடிப்படையில் சிறியளவில் உதவி செய்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதும் அல்லாமல் பணம் தராத RTO போக்குவரத்துறை அதிகாரிகளை பற்றி அவதூறுகளை வெளியிடுவதாக கூறியும், RTO அலுவலகங்களில் பணியாற்றிடும் பெண்களை தொடர்புப்படுத்தி மிக அசிங்கமாகவும், பொய்யான செய்திகளை வெளியிட்டு, ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறையில் புகார் அளிப்பதும், பணம் தராத அதிகாரியை பற்றி வெளியிடும் பொய்யான செய்தியில் உயரதிகாரிகளின் படத்தை வெளியிடுவதுடன் போக்குவரத்துறை அமைச்சர் அவர்களின் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டு போக்குவரத்துறைக்கு தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தும் பிளாக்மெயில் மஞ்சள் பத்திரிகையாளர் நெல்லை கோபால்.

மாமூலில் சம்பாதித்த சொத்துக்கள்
இவருக்கு, தஞ்சாவூரில் 10 கோடி மதிப்பிலான தோட்டம்,பங்களா மற்றும் கோவில்பட்டியில் பல இடங்கள், சென்னையில் மூன்று வீடுகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக உரிமம் இல்லாமல் நெல்லையப்பர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உட்பட 10க்கும் மேற்பட்ட கார்கள் என கோடி கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் அவரது மகன்கள் பெயரில் உள்ளன.

வழக்குகள்
இவரது மகன்கள் பெயரில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், வசூலில் பங்கு கேட்டதால் தன் உடன்பிறந்த தம்பியை துரத்தியடித்ததும் அல்லாமல், மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் திரு.சிவசங்கரன் அவர்களின் பெயரை கூறி தமிழகத்திலுள்ள பல போக்குவரத்து அதிகாரிகளை மிரட்டி சிபாரிசை பெற்று வருவதுடன் சலுகை அளிக்காத அதிகாரிகள் படத்துடன் அமைச்சர் படத்தையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நெல்லை கோபாலின் இரண்டு மகன்களின் மீதுள்ள வழக்குகளை விசாரிக்கும் நிலையில் அவர்களது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தால் போக்குவரத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நபர்களிடம் மிரட்டியது தெரியவரும்.
எனவே, மஞ்சள் பத்திரிகை நடத்தும் நெல்லை கோபால் மற்றும் அவரது மகன்கள், கைது செய்யப்படுவார்கள் என தெரிகின்றது...
தற்கொலை தூண்டுதல்
சமீபத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துக் கொண்ட RTO அதிகாரியின் மரணத்திலும் நெல்லை கோபாலுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை நெல்லை கோபால் மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லைகோபால் என்ற (தொல்லைகோபால்) போலி பத்திரிகையாளராக உள்நுழைந்து, RTO அலுவலகங்களில் மிரட்டலில் ஈடுபட்டு, வசூலில் தலைநிமிர்ந்த சம்பவம் அதிர வைக்கின்றது.
போலி பத்திரிகையளர்.
நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால் அவர்கள் போலி பத்திரிகையாளராக செயல்பட்டு, பல வருடங்களாக, பல தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் போலி பத்திரிகையாளராகவே செயல்பட்டு, மாதந்தோறும் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற தினங்களில் தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களை மிரட்டி வசூல்செய்த பணத்தில் வாங்கிய சொகுசுகார்களில் வலம் வந்து, மாவட்டத்திற்கு மாவட்டம் சொகுசு லாட்ஜ்களில் ரூம்போட்டு கூத்தடித்து, கும்மாளம் போட்டு ஆன்றோர், சான்றோர் நலம் மறந்து, தன்நலம் மட்டும் பெரிது என்று கொண்டு(று) மிரட்டலில் ஈடுபட்டு வசூலித்து வந்த நெல்லை(தொல்லை)கோபால்.
தமிழகத்தில் சென்னையை தலையிடமாக கொண்டு பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என மார்தட்டிக்கொண்டு RNI.No. அரசு பதிவில்லாத '"தலைப்புச் செய்தி'" என்ற பெயரைக் கூறிக்கொண்டு தமிழகம் முழுவதும் மாதா மாதம் அனைத்து RTO அலுவலகங்களிலும் பல வருடங்களாக பகல் கொள்ளைக்காரனாகவும், வழிப்பறிக் கொள்ளைக்காரனாகவும் அரசு அலுவலர்களை மிரட்டி பல லட்சங்களை கையாடல் செய்துள்ளார் இந்த நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால்.
அது ஒரு புறம் இருக்க இவரால் பாதிக்கப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால் எந்த பத்திரிகையில் பணியாற்றி வருகிறார் அவர்? என்றும், ஏதும் சொந்தமாக பத்திரிகை ஏதும் நடத்தி உள்ளாரா? அதற்கு RNI பதிவு ஏதும் உண்டா என்று துப்புதுலங்க ஆரம்பித்த பிறகு, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மிரட்டி வசூல் செய்த பணத்தில் 'நமது அரண்' என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து உள்ளார் என்று தகவல் வருகிறது, ஆனால் அது அச்சு ஊடகமா? ஒளி ஊடகமா? என்று புரியவில்லையாம்.
அவர் போடும் பிட்டுநோட்டீஸில் கூட RNI.NO.பதிவு எண் இதுவரை வெளியிட்டதில்லை அப்போ அவர் போலி பத்திரிகையாளர் தானே? நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால்.
அவருடன் பணியாற்றிய பலரை தனது சுயநலத்திற்காக பலிகடாவாக ஆக்கி உள்ளார் என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தம்பியும் தப்பவில்லை.
ஏன்? தனது உடன் பிறந்த தம்பியையே ஆட்டிப்படைத்து சித்ரவதை செய்துள்ளார் நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால்.
அதன் காரணமாக உடன் பிறந்த சகோதரரே நெல்லைகோபால் என்ற தொல்லைகோபாலின் முகரையில் கூட முழிப்பதில்லையாம் என்ற மற்றொரு தகவலும் வருகின்றது.
தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் வெளிப்படையாக மிரட்டி, தனது (அக்கௌன்ட்) வங்கி கணக்கு எண் அவர்களுக்கு அனுப்பி பணம் போடச்சொல்லும் ஆடியோ பதிவுகளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், இந்த நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால் எனக்கு கிட்னி ஆபரேஷன் செய்து உள்ளது என்றும், கல்லீரல் ஆபரேஷன் செய்து உள்ளது என்றும் பல டயலாக்குகளை சொல்லி அரிச்சந்திரன் நாடகத்தில் கோமாளி வேஷம் போடும் கோமாளியை போல் நடனமாடி தப்பித்துக் கொள்வது நெல்லைகோபால் என்ற தொல்லை கோபாலின் வீரதீர செயல் கைவரிசை என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நக்கல் அடித்தும் வருகின்றனர் கோபால் அவர்களை.
மற்றொன்றும் சொல்கின்றனர்.
இது ஒரு பிழைப்பா? மாதாமாதம் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சுற்றுச்சுவர் கேட்டின் அருகே மிக கேவலமாக நின்று கொண்டு," இன்னாரு வந்திருக்கேன் என்று சொல்" என்று கூறிக்கொண்டு சுற்று சுவரை தாண்டி கூட உள் நுழைய முடியாத நெல்லைகோபால் என்ற தொல்லைகோபாலுக்கு இந்த பிழைப்பு அவசியமா?
காப்பு கட்டப்படுமா?
நெல்லை கோபால் பிணம் தின்னும் கழுகைப்போல், மாதாமாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் அலுவலர்களை மிரட்டி பல லட்சம் கல்லாகட்டும் நெல்லைகோபாலுக்கு விரைவில் காப்பு.
பல RTO அதிகாரிகளை மிரட்டி மாதந்தோறும் லட்ச கணக்கில் வசூல் வேட்டை !
விரைவில் கைதாகும் போலி பத்திரிகையாளர் நெல்லை கோபால்..!

நெல்லை கோபாலுக்கு கப்பம்கட்டும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை...
எவன் செத்தா எனக்கென்ன? எனக்கு தேவை காசு என்ற பாணியில் RTO அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வரும் பிளாக் மெயில் பத்திரிகையாளர் நெல்லை கோபால் போக்குவரத்து துறையே என் காலுக்கு கீழ் என்று திமிராக பேசி வருபவர், சில RTO அதிகாரிகள் கோபாலுக்கு ஆதரவு தருகிறார்கள்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சென்னை K.K. நகரில் வாடகை வீட்டில் குடியேறிய கோபால் அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் வசித்து வருவதால் அந்த வீட்டையையே ஆட்டைய போட திட்டம் போட்டான். அவன் போட்ட திட்டத்திற்கு முட்டு கட்டையாக நின்றவர் ஸ்டார்,ரட்சகன் பட இயக்குநர் ப்ரவீன்காந்த், அவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி ஒரு நாள் அவன் வாடகை இருந்த வீட்டு தெருவில் அரிவாளை எடுத்து அவரை கொலை செய்ய துரத்தினான்.
அவர் அவனிடமிருந்து தப்பித்து K.K. நகர் காவல் நிலையம் சென்று கோபால் மீது புகார் கொடுத்தார். அன்றைய தேதியில் பிரபல வார இதழில் பத்திரிகையாளர் போர்வையில், 'பட்டாகத்தி பைரவன்' என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியாக வந்தது. இது பற்றி தங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சுமார் 30 வருடத்திற்கு முன்பே அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட நினைத்தவன் இந்த பிராடு நெல்லை கோபால்.
இவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது பணம் உதவி, பொருள் உதவி செய்து காப்பாற்றிய கருணை உள்ளம் கொண்ட நல்ல மனிதரை உடல் நலம் தேறிய பின்பு அவரை தவறாக பேசி வருகிறான். அந்த நல்ல மனிதரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவன் நன்றி கெட்டவன் அவனை பற்றி என்னிடம் ஏதும் கேட்காதீர்கள் என்று சுருக்கமாக பேசி பேச்சை துண்டித்து விட்டார்.
முடிவுக்கு வருமா?

சரி விஷயத்திற்கு வருவோம் பாலை குடித்து ருசி கண்ட பூனையை போல் RTO அலுவலகத்தில் ருசி கண்ட இந்த பிராடு கோபால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு RTO அலுவலகத்திலும் எனக்கு ஒரு பெரிய தொகை தர வேண்டும் என்றும் பின்பு RTO, RTO PA, கண்காணிப்பாளர்கள் என தனித்தனியாக செலான் தரவேண்டும் என்று தனக்கு தானே ஒரு சட்டம் போட்டு ஒவ்வொரு அதிகாரியையும் மிரட்டி வருகிறான். அவன் உருட்டல் மிரட்டலுக்கு பயந்த பல பேர் அவன் - கேட்ட தொகையை கொடுத்து - வருகிறார்கள்.அதில் சில பேர் சாக்கடையில் கல் எறிந்தால் நம்மேல்தான் படும் என மன வருத்ததுடன் கொடுக்கிறார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் இந்த பிராடு கோபால். இன்னும் சிலர் இவன் பேச்சை கேட்கமால் தர முடியாது என்று கூறிய நேர்மையான அதிகாரிகளை பற்றி தவறான கருத்துகளை எழுதி வருகிறான் என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.
இவனுடைய மிரட்டலுக்கு பயப்படாத நேர்மையான பெண் அதிகாரி பூங்குழலி அவர்களிடம் 08.05.22 அன்று மாதம் ரூ. 5000/- தர வேண்டும் இல்லை என்றால் உன்னை பற்றி தவறாக எழுதுவேன் என மிரட்டியுள்ளான். அன்றே RTO பூங்குழலி MGR நகர் காவல் நிலையம் சென்று இவன் மேல் புகார் கொடுத்தார். இவனுடைய மிரட்டலுக்கு பயப்படாத குளித்தலை மோட்டார் வாகன ஆய்வாளர் வைதேகி அவர்களிடமும் பணம் கேட்டு மிரட்ட அவர்களும் கரூர் மாவட்ட காவல் நிலையத்தில் போலி பத்திரிக்கையாளர் நெல்லை கோபால் பணம் கேட்டு மிரட்டுகிறான் என்று புகார் அளித்துள்ளார். இதே நிலைமை அவனை வளர்த்துவிடும் சில அதிகாரிகளுக்கு வர எவ்வளவு நேரமாகும் சற்று உஷாராக இருந்தால் சரி
25.07.2023 அன்று காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இவன் மட்டுமல்லாது இவனுக்கு ஜால்ரா போட துணைக்கு நான்கு நபர்களை கூட்டி கொண்டு பொதுமக்களுக்கு வகுப்பு எடுக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் முன்பு சத்தமாக பேச, அவனை சாமதனப்படுத்தி அறைக்கு அழைத்து பேசியுள்ளார்.
இனி மேல் அவன் வரமாட்டான் இவன்தான் வருவான் என கூறி புதிய இதழான 'நமது அரண்' இதழை கொடுத்துள்ளான்.
புதிய இதழை கொடுத்தவுடன் சுதாகரித்துக்கொண்ட ஆய்வாளர் பன்னீர்செல்வம், புதிய இதழுக்கு எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கூற மீண்டும் கோபால் சத்தமிட உடனே பன்னீர்செல்வம் உங்கள் பிரச்சனையை வெளியே பார்த்து கொள்ளுங்கள். அலுவலகத்திற்குள் கொண்டு வராதீர்கள் என்று கோபமாக பேசி அனுப்பியுள்ளார். இதே நிலைமைதான் விழுப்புரம் அலுவலகத்திலும் நடந்தேறியுள்ளது. இவர்கள் இருவருக்கும் என் தனிப்பட்ட முறையில் நன்றிகள்.
தற்போது இவன் ஒரு புது யுக்தியை கையில் எடுத்துள்ளான்.
"எனக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், மற்றும் ஆணையர் எல்லாம் நன்கு தெரியும்" என அனைத்து RTO அலுவலகத்திலும் கூறி தங்களுக்கு தேவையான பதவி உயர்வு. பணியிடமாற்றம் வேறு எந்த பிரச்சனை என்றாலும் நான் முடித்து தருகிறேன் என்று கூறி ஒரு பெரிய தொகை பேசி வருகிறான்.
இத்தனை பிராடு வேலை செய்யும் நெல்லை கோபால் என்ற தீய சக்தியை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். மேலும் நேர்மையான அமைச்சர். ஆணையர் பெயரை கூறி அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முன்பே இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விரைவில் போக்குவரத்து துறையில் பிளாக் மெயில் பத்திரிகையாளர் நெல்லை கோபாலின் ஆட்டம் முடிவுக்கு வருகின்றது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் & பணியாளர்கள் சார்பில் உயரதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.
புகாரும் வழக்குப்பதிவுகளும்.
பல ஆண்டுகளாக வட்டார போக்குவரத்து துறையில் DTC,RTO,MVI என்ன தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலர்களையும் மிரட்டியதின் பேரில் பல காவல் நிலையங்களில் போடப்பட்டுள்ள சி.எஸ்.ஆர் மற்றும் எஃப்.ஐ.ஆர் பார்வைக்கு
1) 07/02/2023 R -7 காவல் நிலையம், கே.கே.நகர், சென்னை-78.
2) CSR - 144/2022 R-10 காவல் நிலையம்.
3) CSR - 422/2024 விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையம்.
4) CSR -626/2023 கடலூர் மாவட்டம் கூடலூர் OT காவல் நிலையம்.
5) CSR - 967/2023 விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் நிலையம்.
6) CSR - 366/2023 விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையம்
7) FIR - 287/2015 கோயம்பேடு, வானரகம் காவல் நிலையம்.
8) FIR - 52/2025 தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலையம்.
பொதுமக்களின் கோரிக்கைகள்
இப்படி பலரை மிரட்டி பல கோடிகள் சொத்து, சொகுசு பங்களா, சொகுசு கார், சொகுசு விடுதி, பல ஏக்கர் நிலம் என அதிரடியாக அதிகாரிகளை மிரட்டி வசூல் செய்த பணத்தை, அதிரடியாக தவேக அரசு நெல்லை கோபால் மீது நடவடிக்கை எடுத்து அந்த சொத்துக்களை ரெக்கவரி செய்து அரசுடமையாக்க வேண்டும்.
மற்றொன்று இனி தமிழகத்தில் எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் நெல்லை கோபால் என்பவர் நமது அரண் என்று சொல்லிக்கொண்டு வசூல் வேட்டைக்கு வந்தால் எந்த அரசு அதிகாரிகளும் நெல்லை கோபாலுக்கு ஒவ்வொரு அலுவலர்களும் 10,000 கொடுக்க தடைவிதிக்க வேணடும் மீறினால் அந்த அலுவலர்களை லஞ்ச ஒழிப்புத்துறை பணம் கொடுக்கும் அலுவலர்களை உடனடியாக கைது செய்து சிறைக் காவலில் வைக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோர்களின் மனக்குமுறலாக உள்ளது!
கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்




