லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது! தமிழக காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம்! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியிட்டார் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது!  தமிழக காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம்!  கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியிட்டார் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் (SSI) ராமகிருஷ்ணன், லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க பணம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீட்டிய திட்டத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புகார்தாரரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்த சம்பவம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.