மதுரை மண்ணை ஆளும் அன்னை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்தத் திருநாளில், அன்னையின் திருவருளைப் போற்றி வணங்குகிறேன்.
மதுரை மண்ணை ஆளும் அன்னை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்தத் திருநாளில், அன்னையின் திருவருளைப் போற்றி வணங்குகிறேன்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். அன்னையின் அருளால் உலகெங்கும் வாழும் பக்தர்களின் வாழ்வில், நலமும், வளமும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாற்றையும், ஆன்மிகப் பெருமையையும், நமது பண்பாட்டின் அழகையும் தன்னகத்தே கொண்ட மதுரை மாநகரம், அன்னை மீனாட்சி அம்மனின் திருவருளால் என்றும் சிறந்து விளங்கட்டும். மதுரையின் புகழும், பெருமையும் உலகெங்கும் மேலும் உயரட்டும்.