புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (10.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில், தேர்தல் தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட உள்ளது. அந்த வகையில் இவ்வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்றையதினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் முடிவுற்றதுடன் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் வகையில் பாதுகாப்பு வைப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.
வாக்கு எண்ணும் நாளன்று சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேசைகள், நாற்காலி அமைத்தல், தடுப்பு கட்டைகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வேட்பாளர்கள், முகவர்கள் அமரும் இடம், வாக்குப்பதிவு எண்ணிக்கை விபரங்கள் அறிவிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.
உள்ளது. மேலும் வாக்கு ஏற்படுத்தவும், தேவையான அரசு அலுவலர்களுக்கு இதேபோன்று குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட எண்ணும் மையத்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தொடர்புடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), திரு.ப.கோகுல்சிங் (இலுப்பூர்), செல்வி.அபிநயா (அறந்தாங்கி), உதவி ஆணையர் (கலால்) திரு.திருமால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரவி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சு.பார்த்தசாரதி, காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பிருந்தா, உதவி இயக்குநர் (நில அளவைத் துறை) திரு.பொன்னையன், செயற் பொறியாளர் (பொ.ப.து.) திரு.ரவிச்சந்திரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அ.செந்தமிழ்குமார், கல்லூரி முதல்வர் முனைவர்.கே.நிர்மலா, உதவி செயற் பொறியாளர் (பொ.ப.து.) திரு.ரமேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்



