புதுக்கோட்டையில் காவலர் வீட்டில் திருடப்பட்ட 35 சவரன் நகைகளை மீட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில பெண்ணையும் 48 மணி நேரத்தில் கைது செய்த புதுக்கோட்டை நகர காவல்துறையினர்!

புதுக்கோட்டையில் காவலர் வீட்டில் திருடப்பட்ட 35 சவரன் நகைகளை மீட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில பெண்ணையும் 48 மணி நேரத்தில் கைது செய்த புதுக்கோட்டை நகர காவல்துறையினர்!

பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை.

புதுக்கோட்டை கம்பன் நகரை சேர்ந்தவர் கலைராஜன். இவர் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளார்.

இவரது மனைவி அபர்ணா திருமயம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் கலைராஜனின் தாயார் தமிழ்ச் செல்வி (65) மட்டும் தனியாக இருந்தார்.

மாலையில் தமிழ்ச் செல்வி முன்பக்க கதவை சாத்திவிட்டு கொல்லைபுரத்தில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் சத்தம் கேட்கவே, தமிழ்ச் செல்வி உள்ளே சென்று பார்த்தபோது ,பீரோ திறக்கப்பட்டு, உள்ளே பையில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக மகன், மருமகளுக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் வீட்டுக்கு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

புகாரின்பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் இருந்த கண் காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, வீட்டில் இருந்து நகைப் பையை எடுத்துக்கொண்டு ஒரு பெண் வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து கேமராவில் பதிவான உருவத்தை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த வந்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்..

அதனை தொடர்ந்து இன்று நகை திருட்டில் ஈடுபட்டு திருடரை கைது செய்தது காவல் துறை.

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்