கரூரில் லஞ்சம் வாங்கிய RTO மற்றும் டிரைவர் கைது! வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
கரூரில் லஞ்சம் வாங்கிய RTO மற்றும் டிரைவர் கைது
கரூரில் தனியார் பேருந்து உரிமையாளர் ராஜேந்திரன்(62) என்பவரிடம் பேருந்துக்கு வரியைக் குறைக்க ₹5,000 லஞ்சம் வாங்கியதாக, வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) தர்மானந்தம் மற்றும் அவரது கார் டிரைவர் வேலுசாமி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்புரோஸ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள உள்ள RTO - தர்மானந்தம் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்*



