இம்மாத கலியுக நாரதர் மாதாந்திர இதழ் தமிழகம் & புதுச்சேரி, வாசகர்கள் வசதிக்காக publicsocialmedia.in இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. "கலியுக நாரதர்" மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்!!!
எனது சொந்த முயற்சி, 13 ஆண்டுகால தீவிர எழுத்துக்களால் எவருக்கும் அஞ்சாமலும், எவரிடமும் கெஞ்சாமலும் நெஞ்சிருக்கும் நோக்கில், செயல்பட்டதின் அடிப்படையில் எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருளால் PRGI அனுமதி உடன் தமிழக மட்டுமல்லாது, புதுவை மற்றும் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செயல்படும் அளவிற்கு பதிவை பெற்று ஒரு சாமானிய விவசாயி பத்திரிகை துறையில்? வளரவில்லை அடிஎடுத்து வைத்துள்ளேன்! என்பதை நினைக்கும் போது மனதிற்கு இனிமையாக இல்லை, கவலையாக உள்ளது!
நான் பத்திரிகை துறையில் பணியாற்றிய பத்திரிகைகள் மற்றும் பல முதன் முதலில் மதுரை மணி, தினசங்கு, உள்ளாட்சி முரசு, சரித்திரம, பேராண்மை, துப்பறியும் விசாரணை, ராத்திரி ரவுண்ட்ஸ், ஈகிள் ரவுண்ட்ஸ், கழுகு பார்வை, தற்போது தின கதிர் என மாத இதழ் மற்றும் நாளிதழ்களில் பணியாற்றியதை விட மாத இதழ்களில் அதிகமாக பணியாற்றியுள்ளேன். எனது வயதிற்கு வரம்பு மீறிய செயலாக இருந்தாலும் கடவுள் அருளால் கலியுக நாரதர் என்ற ஒரு பெயரை தந்து அந்த பத்திரிகை நடத்தும் அளவிற்கு ஆசீர்வாதம் செய்துள்ளார் கடவுள், அனைவரின் ஆசீர்வாதங்களுடன் முதல் தொடக்கம், விமல் என்னிடம் பேச வில்லை அது ஒரு குறையாக உள்ளது, என் ரத்தம் இல்லை என்றாலும் என்னை தம்பியாக அரவணைத்த எனது அண்ணன்(சிவம்), எனது மனைவி ரேகா, என் தங்கை சுசிலா, எனது மைத்துனர்கள் கலியமூர்த்தி மற்றும் சரவணன் அனைவரின் ஒத்துழைப்புகளுடன்.



