புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குறுகிய கால ஒப்பந்தபுள்ளி அறிவிப்பின்படி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2025 - 2026 ஆண்டுக்கான கிராம ஊராட்சிகளில் 15/04/2025 அன்று மாலை 03.00 நடைபெற்ற ஒப்பந்த ஏலம் நடைபெற்றது, அதில் கமிசன் அண்ட் கரப்ஷன் ஏதும் நடக்கவில்லையே?.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குறுகிய கால ஒப்பந்தபுள்ளி அறிவிப்பின்படி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2025 - 2026 ஆண்டுக்கான கிராம ஊராட்சிகளில் 15/04/2025 அன்று மாலை 03.00 நடைபெற்ற ஒப்பந்த ஏலம் நடைபெற்றது, அதில் கமிசன் அண்ட் கரப்ஷன் ஏதும் நடக்கவில்லையே?.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி - கூழையான்விடுதி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிடம் அமைத்தல் 30 லட்சமும்,
அதே பஞ்சாயத்தில் சமத்துவ மயானத்திற்கு காத்திருப்போர் கூடம் ஒன்பது லட்சத்தி 3 ஆயிரம் ரூபாயிலும்,
தொண்டைமான் ஊரணி பஞ்சாயத்து - தெற்கு தொண்டைமான் உடனி ஏடி காலணியில் ஊரணிய ஆழப்படுத்தும் மற்றும் வரத்துக்குள்ளாய் அமைத்தல் 2 லட்சத்திலும்,
அதே பஞ்சாயத்தில் வடக்கு தொண்டைமான் ஊரணி குக்கிராமத்தில் நெற்களம் அமைத்தல் ஒன்பது லட்சத்து 10 ஆயிரத்திலும்,
அதே தொண்டைமான் ஊரணி கிராம ஊராட்சியில் அண்ணாநகர் முதல் பாலடியான்நகர் வரை சிமெண்ட் சாலை 8 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயிலும்,
அதே தொண்டைமான் ஊராட்சி தெற்கு தொண்டைமான் ஊரணி உக்கிரமம் சமத்துவ மயாணத்திற்கு காத்திருப்போர் கூடம் 8 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாயிலும்,
அதே தொண்டைமான் ஊரணி கிராம ஊராட்சியில் தெற்கு தொண்டைமான் ஊரணி குக்கிராமம் நியாய விலை கடை அமைத்தல் 13 லட்சத்து 30 ஆயிரத்திலும்,
மணவிடுதி கிராம ஊராட்சி மணவிடுதி குக்கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கடிதம் அமைத்தல் 28 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாயிலும்,
அதே ஊராட்சியில் மணவிடுதி குக்கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல் 14 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயிலும்,
எம் குளவாய்ப்பட்டி ஊராட்சி ஏ -மாத்தூர் குக்கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல் 15 லட்சத்திலும்,
அதே ஊராட்சியில் பி-மாத்தூர் கிராமத்தில் நெற்களம் அமைத்தல் ஒன்பது லட்சத்து 10 ஆயிரம் ரூபாயிலும்,
அதே ஊராட்சியில் தொண்டைமான் விடுதி குக்கிராமத்தில் சமத்துவம்யானத்திற்கு காத்திருப்போர் கூடம் அமைத்தல் 6 லட்சத்திலும்,
எம் குளவாய்ப்பட்டி கிராம ஊராட்சி எம்குளவாய்பட்டி குக்கிராமத்தில் சமத்துவ மயானத்திற்கு காத்திருப்போர் கட்டிடம் அமைத்தல 6 லட்சத்திலும்,
அதே ஊராட்சியில் குப்புடையான்பட்டி கிராமத்தில் பழனி விடு முதல் ராணி வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல் 2,86,000 ரூபாயிலும்,
அதே ஊராட்சியில் எம் குளவாய்ப்பட்டி ஏடி காலனி முதல் மகமாயிவிடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல் 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயிலும்,
சோத்துப்பாளை கிராம ஊராட்சி சோத்துப்பாளை கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமைத்து 30 லட்சத்திலும்,
சோத்துப்பாளை கிராம ஊராட்சி நரிங்கிப்பட்டி கிராமத்தில் நெற்களம் அமைத்தல் 9 லட்சத்தி பத்தாயிரம் ரூபாயிலும்,
ஆதனக்கோட்டை கிராம ஊராட்சி ஆதனக்கோட்டை AD காலணியில் குக்கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல் 15 லட்சத்திலும்,
ஆதனக்கோட்டை கிராம ஊராட்சி முத்துராஜா தெரு, குக்கிராமத்தில் நெற்களம் அமைத்தல் 9 லட்சத்தி பத்தாயிரம் ரூபாயிலும்,
ஆதனக்கோட்டை கிராம ஊராட்சி மடத்துக்கடை குக்கிராமத்தில் புதிய அக்ரஹாரம் விநாயகர் பள்ளி முதல் கனகராஜ் வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல் 1 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயிலும்,
ஆதனக்கோட்டை கிராம ஊராட்சி அம்மன்நகர் சின்னப்பொண்ணு வீடு முதல் ராசாத்தி வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல் 7 லட்சத்து 49 ரூபாயிலும்,
ஆதனக்கோட்டை கிராம ஊராட்சி புதிய மின்வாரியம் அருகில் ரமேஷ் வீடு முதல் லட்சுமி வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல் 3 லட்சத்து 61 ஆயிரம் ரூபாயிலும் ஏலம் விடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பல லட்சங்களில் விடப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஏதும் குளறுபடி நடக்கவில்லையே?
பத்திரிகையாளர்: வீரராகவன்; 9443401036



