விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெறும் பகுதிகளைச் சுற்றி அவரை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது!

விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெறும் பகுதிகளைச் சுற்றி அவரை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது!

ஈரோடு அருகே உள்ள விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றுவிடக் கூடாது என்று காவல் துறை தரப்பில் 2000-த்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஈரோடு தொடங்கி விஜயமங்கலம் வரையிலும், அதேபோல் விஜயமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும் விஜய்யை வரவேற்று கட்சிக் கொடிகள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதிலும் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெறும் பகுதிகளைச் சுற்றி அவரை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது