​புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைகாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ராஜ் என்பவரது தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் அரவிந்த் ஸ்ரீமன் இன்பராஜ் ஆகிய மூன்று பேர் புதுக்கோட்டைக்குச் சென்று ஜனநாயகன் திரைப்படம் பார்த்துவிட்டு, ஊருக்குத் திரும்பி உள்ளனர். 

அப்போது அவர்களது கார் புதுக்கோட்டை அரசடிப்பட்டி சாலையில் சென்றபோது ராயப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நான்கு முறைக்கு மேற்பட்ட உருண்டு அருகே இருந்த அருள்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து நுழைவு வாயிலில் இருந்த இரும்பு கதவில் பலமாக மோதி விபத்துக்குள்ளாகி செங்குத்தாக நின்று விபத்துக்குள்ளானது.

​இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்

​இச்சம்பவம் குறித்து சம்பட்டிவிடுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.