புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்..! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்..! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்

   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை இல்லா இந்தியா பிரச்சாரம் (NASH mukt Bharat Abhiyaan) திட்டத்தின் மூலம் போதை பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா இன்று (26.06.26) கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

   விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் பாரதி மகளிர் கலைக் கல்லூரி மாணவ ,மாணவிகள் 250 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பையா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், உதவி ஆணையர்(கலால்) திருமால் மற்றும் பாரதி மகளிர் கலை கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.