புதுக்கோட்டையில் 6- காவல் நிலையத்தில் நீதிமன்ற பிடிவாரண்ட்!, 40க்கும் மேற்பட்ட வழக்கு பத்துக்கு மேற்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த கொள்ளையனை தட்டி தூக்கிய அறந்தாங்கி காவல்துறை
புதுக்கோட்டையில் 6- காவல் நிலையத்தில் நீதிமன்ற பிடிவாரண்ட் !40க்கும் மேற்பட்ட வழக்கு பத்துக்கு மேற்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த கொள்ளையனை தட்டி தூக்கிய அறந்தாங்கி காவல்துறை.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தீபாவளிக்கு முதல் நாள் டைலர் கடையின் பூட்டை உடைத்து ஒன்றரை லட்சம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது
இந்த நிலையில் திருட்டு சம்பவம் குறித்து அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்
அதன் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தூரப் பாண்டியன் ஆகியோர் தனிப்பிரிவு காவலர்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனை தேடி வந்தனர்
இந்த நிலையில் திருடன் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர்
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (42) என்ற கொள்ளையனை கேரளா மாநிலம் பாலக்காட்டில் வைத்து கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட திருடனை தற்பொழுது அறந்தாங்கிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையன் சுரேக்ஷை விசாரணை செய்ததில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 40 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும் ஆறு காவல் நிலையக்களில் நீதிமன்ற பிடிவாரண்டும் 10 -க்கும் மேற்பட்ட வழக்குகளில் தலைமறைவாகவும் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது
பல காவல் நிலையத்திற்கு தண்ணி காட்டி வந்த திருடனை புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் தட்டி தூக்கியதால் அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர் மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் தனிப்படை காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
பத்திரிகையாளர் : வீரராகவன்



