திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அவரை டோஸ் விட்ட அமைச்சர்!
திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அவரை டோஸ் விட்ட அமைச்சர்.

இன்று 22/12/2025 திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தக்கோட்டை வேப்பங்குடி, இம்னாம்பட்டி கிராம ஊராட்சிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு புதிதாக கட்டப்பட்ட உயர்நிலை நீர்தேக்க தொட்டிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்களுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து திமுக ஆட்சியின் செயல் திறன் பற்றி பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சில கிராமம் பெண்கள் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்றும் மற்றும் இன்னும் பல குறைபாட்டு கோரிக்கைகளை அமைச்சர் அவர்களிடம் கிராமப் பெண்கள் எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.

எதார்த்தமாக அமைச்சர் சிவ.வீ.மய்யநாதன் அவர்கள், திறந்து வைத்த உயர்நிலை நீர் திறக்க தொட்டியில் இருந்து சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் திருகு குழாய்களை திறந்து பார்த்தபோது காத்து கூட வரவில்லை.
வேகமடைந்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வட்டார வளர்ச்சி அவர்கள் (கிராம ஊராட்சிகள்), ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை காட்டமாக டோஸ் விட்டார்.

மற்றொன்று நிதி ஒதுக்கிய அத்துறை அமைச்சர்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சரவையில் எடுத்துரைத்த அமைச்சர்களின் பெயர்களை நீர் தேக்க தொட்டியில் எழுதாமல் ஒப்பந்தம் எடுத்து உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டிய திரு.வடிவேலு என்பவர் பெயரை பிழையில்லாமல் பெரிதாக எழுதி வைத்துள்ளனர்.
அப்போ திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள் அவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் கமிசன் அடிப்படையிலே பணியாற்றுகிறாரோ! என்ற எண்ணம் எழுகிறது! அரசிடம் இருந்து மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்க வில்லை என்பது போல் பிடிஓ வின் செயல்பாடாக உள்ளது.
பத்திரிகையாளர் : வீரராகவன்



