????பகவத்கீதை???? மகிழ்வித்து மகிழ்
????பகவத்கீதை????
*(ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்) மூவகை குணங்களில் மங்கியிருப்பதால், குணங்களுக்கு அப்பாற்பட்ட அழிவற்ற என்னை (இறைவனை) உலகம் முழுவதுமே அறியாது.*
- *????பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.????*
சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்
நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்!
வலிகளே நல்ல வழிகாட்டி.
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப வரும்போது தெரியும் நீ செய்த உன்னையே அழிக்கும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு
வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்...
வலி வந்த போது தான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடு தான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டது தான் இந்த வாழ்க்கை...
உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போது தான் அழகான உடற்கட்டைப் பெற முடிகிறது...
இப்படித் தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும் போது தான் வளமான வாழ்க்கை வாழ முடியும்...
'வலியை அனுபவியுங்கள்'; அதை பரிபூரணமாக உணருங்கள், ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள்...
'வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகி விடும்', வலி என்பது ஒரு துன்பம். அந்தத் துன்பம் ஓர் எச்சரிக்கை; அது ஒரு வழிகாட்டியும் கூட...!
வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழி காட்டும்...
நமக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும், நமக்கான மாற்றத்திற்கானதாக மாற்றிக் கொள்ளும் சூத்திரம் தெரிந்தால் போதும்; அது உடல் வலியானாலும், மன வலியானாலும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது...
வலிகளை வெற்றிகளாக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...
ஆம் நண்பர்களே...!
அனைத்து வலிகளும் நம்மைப் பக்குவப்படுத்தவே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...!
நாம் குறிக்கோளை எட்டிட வேண்டுமானால் சிறிய வலிகளைப் பொறுத்துத் தான் ஆகவேண்டும்...!!
வலிகளையும், இடையூறுகளையும் தாண்டிச் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்.
#ஶ்ரீமத்பகவத்கீதை ????
10. #விபூதி_யோகம்
பாகம் _21
????37. " விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன்; பாண்டவர்களுள் தனஞ்ஜெயன்; முனிவர்களுள் வியாசர்; கவிகளுள் நான் சுக்கிரன்". ????
விளக்கம்: யாதவர்கள் எல்லோரும் விருஷ்ணியின் வம்சத்தில் வந்தவர்கள் ஆதலால் அவர்களுக்கு "விருஷ்ணிகள்' என்ற பெயருண்டு. கிருஷ்ணர், வசுதேவர் உடைய புதல்வர். எனவே அவருக்கு "வாசுதேவன்" என்ற பெயர் வந்துள்ளது. யாதவர் கூட்டத்தில் இவரே எல்லோரையும் விட மகிமை மிக்கவர். எனவே "விருஷ்ணிகளுள் நான் #வாசுதேவன்(கிருஷ்ணன்) என்கிறார் பகவான்.
தனஞ்ஜயன் என்பது அர்ஜுனனின் இன்னொரு பெயர். மன்னர்களிடம் பயன்படாது தேவையற்று கிடந்த செல்வங்களை எல்லாம், அந்த அரசர்களை வென்று, கொண்டுவந்து நல்வழியில் பயன்படுத்தியதால் #தனஞ்ஜெயன் என்ற பெயர் அர்ஜுனனுக்கு வந்தது. தர்மத்தின் தலைவனான யுதிஷ்டிரர், நான் என்று சொல்லாது, "பாண்டவர்களுள் நான் தனஞ்செயன்" என்று கிருஷ்ணர் சொன்னது அர்ஜுனனும், மகாவிஷ்ணுவின் அம்சமே! என்பதாகும்.
கர்ணனின் முற்பிறப்பான
#தம்போத்பவன் என்ற #சகஸ்ரகவசன் (உடலோடு ஒட்டிய ஆயிரம் கவசங்களை உடையவன்) என்ற அசுரனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு_ நரன், நாராயணன் என இருவராக அவதரித்திருந்தார். இதில் நரனாக வந்த அம்சமே அர்ஜுனனாகவும், நாராயணராக வந்த அம்சமே கிருஷ்ணராகவும் அவதரித்தனர். எனவே "பாண்டவர்களுள் நான் தனஞ்ஜெயன் (அர்ஜுனன்) என்கிறார் பரமாத்மா.
தனது வெற்றிக்கு எல்லாம் தானே முதற்காரணம் என நினைக்காது, இறைவனே முதற்காரணம்! என எண்ண வேண்டும்! என்பதை நினைவூட்டவே, பகவான், அர்ஜுனனாக இருப்பதும் நானே!என்கிறார்.
அந்தர்முக திருஷ்டி(உள்முகமாகப் பார்த்து, தன்னையே உணரும் ஞானநிலை) மனதே முழுவதும் செலுத்தி மெய்ப்பொருளை முற்றிலும் அறிந்து கொள்ள வல்லவர்களே முனிவர்கள். அத்தகைய பூரண ஞானிகளில் முக்கியமானவர் #வியாசர். அவருக்கு வேதவியாசர் என்றும், பாதராயணர் என்றும் துவைபாயனர் என்றும் வேறு பெயர்கள் உண்டு அவரது கருமை நிறத்தை முன்னிட்டு, "கிருஷ்ண துவைபாயனர்" என்றும் அவரை அழைப்பர். பராசரருக்கும் சத்தியவதிக்கும் பிள்ளையாக பிறந்தார் வேதவியாசர். இவர் வேதங்களை எல்லாம் தொகுத்தார்; வேதாந்த சூத்திரங்களை வகுத்தார்; மகாபாரதத்தையும், புராணங்களையும் எழுதினார். அவர் சுக மகரிஷியின் தந்தையாவார். எனவே பரமாத்மா "முனிவர்களுள் நான் வியாசர்" என்கிறார்.
வெளியுலகத்தை பற்றிய பரந்த அறிவு உடையவர்களக் #கவி என்று அழைப்பது பழைய வழக்கம். நாளடைவில் புலவர்களுக்கும் "கவி" என்ற பெயர் வந்தது. "உசனா" என்பது சுக்கிரனுக்கு மற்றொரு பெயர். இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. அவர் தந்த பயிற்சியால் அசுரர்களுக்கு ஆற்றல் மிக உண்டாயிற்று. எனவே "கவிகளுள் நான் சுக்கிரன்" ( சுக்ராச்சாரியார்_ அசுரகுரு, வெள்ளி கிரகம்) என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
*ஞான யஜ்ஞம்!*
பகவான் கிருஷ்ணரிடம், அர்ஜுனன் இந்தக் கேள்வியை எழுப்பினான்.
பெருந்தோளுடையாய்! கர்ம மார்க்கம், யோக மார்க்கம் இரண்டிலிருந்தும் வழுவியவனாய், மயக்கமுற்றவனாய், மெய்ப்பொருளை உணர்கின்ற ஞான மார்க்கத்திலிருந்து நழுவிவிட்ட ஒருவன், எவ்வித ஆதாரமும் இல்லாமல், சிதறடிக்கப்பட்ட மேகம் போன்று அழிந்துவிடு வானன்றோ? இவ்வாறு கூறிய பிறகு, மீண்டும் பகவானிடத்தில் தனது ச்ரத்தையை நன்கு வெளிப்படுத்துகிறான்.
*ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத:*
*த்வதந்ய ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே*
*(ஸ்ரீமத் பகவத்கீதை 6-39)*
ஓ... பகவானே! இதுவே என்னுடைய ஐயமாகும்.
என்னுடைய இந்த ஐயத்தை முழுமையாகப் போக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர், உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை. கர்ம மார்க்கத்திலும் செல்லாமல், ஞான மார்க்கத்திலும் தொடர்ந்து செல்வதற்குரிய உந்துதல் இல்லாமல், குழப்பத்திலும் இயலாமையிலும் ஆழ்ந்திருக்கும் ஒருவரது நிலையைப் பற்றிய கேள்வி இது.
இந்தக் கேள்விக்குரிய விடையில்தான் ஒருவர் தொடர்ந்து ஞான மார்க்கத்தில் செல்வதும் சொல்லாததும் மறைந்திருக்கிறது. பகவான் ஒருவரே இந்த சந்தேகத்தைப் போக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். பகவான் அவரவர் செய்த கர்மங்களுக்குரிய பலன்களை அருள்பவர்.
நாம் செய்த வினைகளுக்கேற்ப அடுத்தடுத்த பிறவிகளில் நாம் எத்தகைய உடல்களைப் பெறப்போகிறோம். எத்தகைய இன்ப, துன்பங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்போம். ஆகிய அனைத்தையும் அவர் ஒருவரே அறிவார்.
எனவே, அர்ஜுனனின் கேள்விக்கு பகவானால் மட்டுமே பதில் கூற முடியும். வ்வாறு மூன்று ச்லோகங்களில் அர்ஜுனன் தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினான். பகவான், ஆன்மிக ஸாதகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில், மிக அழகாக அர்ஜுனனின் ஐயத்தைப் போக்கி, தெளிவுபடுத்தத் தொடங்குகிறார்.
*ஸ்ரீபகவாநுவாச:*
*பார்த்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே*
*ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி (ஸ்ரீமத் பகவத்கீதை 6-40)*
*பகவான் உரைத்தது:*
அர்ஜுனா! நற்செயல்களில் ஈடுபட்ட ஒருவர் இப்பிறவியிலோ அடுத்து வரும் பிறவிகளிலோ ஒருபோதும் கீழான நிலையை அடைவதில்லை. அழிந்து போவதில்லை அப்பனே! முதலில் பகவான் அர்ஜுனனுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறுகிறார்.
அர்ஜுனனுடைய கேள்விக்குரிய விடைகள் அடுத்தடுத்த ச்லோகங்களில் வரப்போகின்றன. பகவான் கூறப்போகின்ற விடைகளில் ஸாரம் இதுதான்: கர்ம மார்க்கத்திலிருப்பவர், பூஜைகள், சடங்குகள், முதலியவற்றை ச்ரத்தையுடன் செய்கிறார்.
ஞான மார்க்கத்திலிருப்பவர். வேதாந்த சாஸ்த்ரங்களை குருமுகமாகக் கேட்டு, உள்வாங்கிக் கொள்கிறார். இவையிரண்டும் தனித்தனியே இருவேறு வித ஸாதனைகள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதோ ஒரு ஸாதனையில்தான் நம்மால் ஆழ்ந்து ஈடுபட முடியும்.
கர்ம மார்க்கத்தை விட்டு, ஞான மார்க்கத்துக்கு வந்துவிடுகிறோம். ஞான மார்க்கத்தில், வேதாந்த சாஸ்த்ரங்களை குருவின் வாயிலாகக் கேட்கத் தொடங்குகிறோம். வேதாந்த சாஸ்த்ர ச்ரவணம் என்ற இந்த ஸாதனையானது, முக்கிய பலன், அவாந்தர பலன் என்று இரண்டுவிதமான பலன்களை உடையது.
முக்கிய பலன் ஞானத்தைக் கொடுப்பது. அவாந்தர பலன் என்பது புண்ணியம். வேதாந்த சாஸ்த்ரம் நமக்கு நன்கு விளங்கினால், உள்ளத்தில் அது ஞானத்தை உண்டுபண்ணும். விளங்கவில்லையென்றால், புண்ணிய பலனைக் கொடுக்கும்.
ஞானம் உள்ளத்தில் வேரூன்றினால், பிறவாப் பெருநிலையாகிய மோக்ஷத்தை உணரலாம். இல்லையெனில், வேதாந்த ச்ரவணம் புண்ணியத்தைக் கொடுத்து, வரும் பிறவிகளில் ஸ்வர்க்கலோகத்தைக் கொடுக்கும். ஸ்வாமீ சின்மயானந்தர், பகவத்கீதை சொற்பொழிவுகளை, ஞாந யஜ்ஞம் என்று அழைத்தார்.
யஜ்ஞம் என்றால் ஹோம குண்டம் முதலியவை இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். நம்முடைய காதுகளே ஹோம குண்டம் குருநாதர் கூறும் சாஸ்த்ர வாக்கியங்களே ஆஹுதிகள், நம்முடைய உள்ளத்தில் எழுகின்ற ஞானமே அக்னி.
கல்யாணக்ருத் என்ற சொல்லுக்கு, புனிதமான செயல்களில் ஈடுபடுவன் என்று பொருள். புனிதமான ஆன்மிக ஸாதனைகளுள் ஈடுபடுபவன் ஒருபோதும் கீழ்மை அடைவதில்லை.
*ஸ்ரேயாந் த்ரவ்ய மயாத் யஜ்ஞாஜ் ஞாநயஜ்ஞ: பரந்தப*
*(ஸ்ரீமத் பகவத்கீதை 4-33)*
எதிரிகளை வாட்டுபவனே! திரவியங்களைக் கொண்டு செய்கின்ற யஜ்ஞங்களைக் காட்டிலும் ஞான யஜ்ஞமானது உயர்ந்தது என்று பகவான் ஏற்கெனவே கூறியுள்ளது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
எனவே அர்ஜுனா! "விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன்; பாண்டவர்களுள் #தனஞ்செயன்; முனிகளுள் வியாசர்; கவிகளுள் நான் சுக்கிரன்" என்கிறார்!
ஸ்ரீகிருஷ்ண_பரமாத்மா.????
#



