கும்பிடப்போகும் சாமியே வரம் கொடுக்கும் போது, அந்த வரத்தை பூசாரி கொடுக்க விடாமல் தட்டி விட்டது போல்செயல்பட்ட சம்பட்டி விடுதி கிராம நிர்வாக அலுவலர், தண்டனை கொடுக்குமா? அந்த தெய்வம். 

புதுக்கோட்டை மாவட்டம்

செம்பட்டிவிடுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சமூக கூட்டமைப்புகள், சமூக ஆர்வலர்கள் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை போராட்டம்.

தேதி: (20.07.2026)

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, செம்பட்டிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த அதிகாரம் என்பவர், நத்தம் புறம்போக்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO) எந்தவித கள ஆய்வும் மேற்கொள்ளாமல், சாதிய பார்வையில் எதிர்தரப்பினருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதுடன், அவர்களிடம் நலன் பெற்று செயல்பட்டதாகவும், சாதி ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே, செம்பட்டிவிடுதி கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரம் அவர்களுக்கு சட்டப்படி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி (20.07.2026)

சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம் சார்பிலும், சமூக கூட்டமைப்புகள், சமூக ஆர்வலர்கள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

 *கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்*