இச்சடியில் இப்படி ஒரு பேக்கரியா? மனிதக் கழிவுகள் பேக்கரியை சுற்றி வெளிப்படையாக வெளியேறுகிறது! துர்நாற்றம் சுற்றுவட்டமும் வீசுகிறது! உணவு பாதுகாப்பு துறை எப்படி அனுமதி கொடுத்தது?
இச்சடியில் இப்படி ஒரு பேக்கரியா? மனிதக் கழிவுகள் பேக்கரியை சுற்றி வெளிப்படையாக வெளியேறுகிறது! துர்நாற்றம் சுற்றுவட்டமும் வீசுகிறது! உணவு பாதுகாப்பு துறை எப்படி அனுமதி கொடுத்தது?

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் கிராம ஊராட்சி, இச்சடியில் தஞ்சை To புதுகை சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருவாக்கு சாமி ஜீ என்ற பேக்கரி ஒன்று உள்ளது.
பேக்கரியின் எதிர்புறம் வாழைத்தார்கள் மற்றும் பலவகைகளுடன் புதுப் பொழிவுடன் கண்களில் பேக்கரி தென்பட்டாலும், உள் சென்று பார்த்தால் துர் நாற்றம் மூஞ்சில் அடிக்கிறதாம்.
பேக்கரியின் உரிமையாளர் சம்பட்டிவிடுதியில் ஒரு கோவிலை உருவாக்கி, அதற்கு அருள்வாக்கு சாமி ஜீ என்ற பெயரை வைத்து சில வருடங்கள் நிர்வகித்து விட்டு, தற்போது வருமானம் மிஞ்சுவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் அருள்வாக்கு சாமி ஜீ என்ற பெயரில் பேக்கரி வைத்து செயல்படுகிறாராம்.
அது போகட்டும், அது அவரது திறமை, ஆனால் மக்கள் அன்றாட பயன்படுத்தும் தின்பண்டங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், அசுத்தமாக வைத்துக் கொள்ள கூடாது.

பேக்கரி வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் பாத்ரூம் செப்டிக்டேங்கில் கழிவுகள் நிரம்பி பேக்கரியை சுற்றி துர்நாற்றம் வீசம் அதிகமாக உள்ளது, அதை அருள்வாக்கு சாமிஜீ உடனடியாக சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
மற்றொன்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தற்போது பிரவீனா இல்லை மாற்றம் ஆகிவிட்டாரா என்பது தெரியவில்லை, இதையெல்லாம கவனிக்காமல் எப்படி உரிமம் வழங்கினார்கள் என்று தெரியவில்லை, இறுதியில் தாங்கள் மாற்றம் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
போக்குவரத்து பொதுமக்கள்



