28/10/2025 இன்றைய ராசிபலன்
*╔┈┈┅◉★◆☆•????︎•☆◆★◉┅┈┈╗*
*_꧁. ???? ஐப்பசி: ???????? ????????꧂_*
*_???? செவ்வாய் -கிழமை_ ????*
*_???? ????????•????????•???????????????? ????_*
*_???? ராசி- பலன்கள் ????_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_???? மேஷம் -ராசி: ????_*
மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 3
????அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️அஸ்வினி : சோர்வுகள் நீங்கும்.
⭐️பரணி : ஒத்துழைப்பான நாள்.
⭐️கிருத்திகை : பேச்சுக்களில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: ????_*
செயல்களில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். தூர பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : கிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 9
????அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐️கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
⭐️ரோகிணி : மந்தமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: ????♀_*
கணவன் மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் சில பிரச்சனைகள் நீங்கும். செயல்களில் ஆதாய நிலை மேம்படும். அந்நிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த செய்திகள் வரும். பணிகளில் இருந்த சோர்வுகள் விலகும். வருவாய் செயல்களில் கவனம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 9
????அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : அறிமுகம் ஏற்படும்.
⭐️புனர்பூசம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: ????_*
தன வரவுகள் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகளை நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 3
????அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️புனர்பூசம் : வரவுகள் அதிகரிக்கும்.
⭐️பூசம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️ஆயில்யம் : திருப்பங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: ????_*
வரவுக்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணம் மூலம் வரவுகள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மகம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️பூரம் : அலைச்சல் அதிகரிக்கும்.
⭐️உத்திரம் : வரவுகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: ????_*
மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். குடும்ப விஷயமாக அலைச்சல் உண்டாகும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஊக்கம் மேம்படும் நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 9
????அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : குழப்பமான நாள்.
⭐️அஸ்தம் : வரவுகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : பிரச்சனைகள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருள்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 1
????அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.
⭐️சித்திரை : முயற்சிகள் கைகூடும்.
⭐️சுவாதி : அனுகூலம் ஏற்படும்.
⭐️விசாகம் : வாய்ப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: ????_*
எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். மறதி குறையும் நாள்.
????அதிர்ஷ்ட திசை : தெற்கு
????அதிர்ஷ்ட எண் : 2
????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️விசாகம் : உதவிகள் சாதகமாகும்.
⭐️அனுஷம் : ஆதாயம் மேம்படும்.
⭐️கேட்டை : கவலைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: ????_*
உறவினர்கள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் மேம்படும். அரசு சார்ந்த செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். பெருமை நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : தெற்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️மூலம் : நெருக்கடிகள் உண்டாகும்.
⭐️பூராடம் : ஆலோசனைகளில் கவனம்.
⭐️உத்திராடம் : கனிவு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: ????_*
மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
????அதிர்ஷ்ட எண் : 3
????அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
⭐️உத்திராடம் : குழப்பமான நாள்.
⭐️திருவோணம் : அலைச்சல் அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : பக்குவம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: ????_*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். அசதி வெளிப்படும் நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 9
????அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️அவிட்டம் : ஆதரவான நாள்.
⭐️சதயம் : மேன்மையான நாள்.
⭐️பூரட்டாதி : தடைகள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: ????_*
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 1
????அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
⭐️உத்திரட்டாதி : சங்கடம் விலகும்.
⭐️ரேவதி : ஒத்துழைப்பான நாள்.
*┈┉┅━•• ????????????••━┅┉┈*



