மக்களால் பாராட்டப்படும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர், பணி சிறக்க வாழ்த்துக்கள்.

மக்களால் பாராட்டப்படும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர், பணி சிறக்க வாழ்த்துக்கள்.

   மக்களால் பாராட்டப்படும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர், பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ஒரு அரசியல்வாதியையோ அல்லது அரசு அதிகாரிகளையோ பொதுமக்கள் எளிதில் பாராட்ட மாட்டார்கள். அவர்கள் நல்லதே செய்திருந்தாலும் யாரோ ஒருவர் அவரை பற்றி குறை கூறுவர். பொது மக்கள் மனதில் நல்ல பெயரை பெற்று எந்நேரமும் சிரித்த முகத்துடனும் பொதுமக்களுக்கு வேலையை விரைந்து முடித்து அவர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பவர் தான் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு. இவர் கூடுதல் பொறுப்பாக நாகப்பட்டிணம் வட்டார போக்குவரத்திலும் பணியாற்ற அவரது மேல் அதிகாரிகளால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு அவர்களின் அலுவல் நேரம் காலை 10.00 மணி என்றாலும், அவர் அலுவலகத்திற்கு காலை 9.00 மணிக்கே வந்து தன் பணியை தொடங்கி விடுவார். அவர் வந்ததும் முதலில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்களை அழைத்து அவர்களின் வேலையை முடித்து அவர்களை அனுப்பி விடுவார். ஏன் என்றால் என்னால் பொதுமக்கள் யாரும் நேரம் செலவிடக்கூடாது என்றும், வேலை பாதிக்கப்பட கூடாது என்றும் நான் பொது மக்களின் சேவகன் என்று, தன் வேலையை நேர்மையுடனும், மனச்சாட்சியோடும் செய்துவருகிறார்.

மேலும், அலுவலகத்திற்கு விபரம் அறியாதவர்கள் யாரேனும் வந்தால் அவர்களை அழைத்து எந்த வேலைக்கு அவர்கள் வந்தார்களோ, அதை செய்து முடித்து. அவர்களும் வந்த வேலை சீக்கிரம் முடித்துவிட்டது என மன மகிழ்ச்சியோடு அவரை வாழ்த்தி செல்கின்றனர். அது மட்டுமல்லாது அங்கு வரும் புதிய வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றியும், சாலை விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மேட் அணிந்து செல்வதன் பயன் பற்றியும், காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிந்து செல்வதன் பயன் பற்றியும் அறிவுரை கூறி, அவ்வப்போது வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

கூடுதல் பொறுப்பேற்ற நாகப்பட்டிணம் அலுவலகத்திலும், தன் வேலையை சிரித்த முகத்துடனும், பொதுமக்களிடம் அன்பாக பழகியும், தனது பணியை திறம்பட செய்து வருகிறார் ஆய்வாளர் பிரபு அவர்கள். இந்த அலுவகத்திற்கு பொறுப்பு ஏற்றவுடன் நாகப்பட்டிணம் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரையும், அழைத்து அவர்களிடம் தங்கள் ஆட்டோவில் அதிக ஆட்கள் ஏற்ற கூடாது என்றும் வெளியூர் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்ககூடாது என்றும் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்றும் எல்லோரும் ஆட்டோ ஓட்டுனர் உரிமம் அனைத்து ரெக்கார்டுகளும், வைத்துக் கொண்டு பாதுகாப்பாக ஆட்டோ ஓட்ட வேண்டும் என்று கூறி நாகப்பட்டிணம் ஆட்டோ ஓட்டுனர்களிடம் புதுமுயற்சியை ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுனர்களும், சார் நீங்கள் சொன்னதை பின்பற்றி நடந்து கொள்கிறோம் என்று உறுதிமொழி கொடுத்தனர். தினமும் வாகன சோதனை செய்து அரசுக்கு பெரும் வருவாய்யை ஈட்டி கொடுத்து வருகிறார்.

இவரை பற்றி ஒரு தவறான செய்தியை சக மோட்டர் வாகன ஆய்வாளர், ஒருவர் இவரின் வளர்ச்சி மீது பொறாமைப்பட்டு ஒரு சில பத்திரிகையாளர்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து இவரை பற்றி தவறான செய்தியை பரப்பி வருகிறார். இதை கேள்விபட்டு நாம் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, நான் எனது பணியை மனச்சாட்சியோடும், மனநிறைவோடும், மக்கள் பணி செய்து வருகிறேன். என்னை பற்றி தவறான செய்தியை பரப்புவர் மீது நான் சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்றும் என்னை பற்றி குறை கூறுபவர்கள் நன் வேலை செய்யும் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் கூறினால் என்றால் நான் பதில் கூறுவேன். கண்ட கண்ட நாய்களுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது என்றும், ஒருவன் செய்யும் பாவம், அவனை மட்டுமல்லாது அவனது பிள்ளைகளையும், சேர்த்து பாதிக்கும் என்பதை அவன் புரிந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.

அவர் நம்மிடம் கூறும்போதே அவர் எவ்வளவு மன வேதனையில் உள்ளார் என்பதை நாம்மால் அறிய முடிந்தது. பொதுமக்களே அயராது வேலை பார்க்கும் அவரை பாராட்டி வரும் பட்சத்தில் நாமும் அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி செவ்வனே செய்ய ஆண்டவன் அருள் புரிய வேண்டும் என்று பொது மக்களோடு சேர்ந்து நாமும் அவரை பாராட்டுவோம்.