ஆலங்குடி வருவாய் துறையினரை கண்டித்து காவடி எடுக்கும் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வருவாய்த்துறையினரை கண்டித்து காவடி எடுக்கும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆலங்குடி தாலுக்கா மாங்கனாம்பட்டி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் சிரம் கொன்ற காளிகோயில் நிலம் மூன்றரை (3.1/2) ஏக்கரை சிலர் ஆக்கரமிப்பு செய்துள்ளதை மீட்டு தரக்கோரி பலமுறை மக்களால் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஆலங்குடி வருவாய் துறையினரை கண்டித்து 11/11/2025 வெள்ளிக்கிழமை அன்று காவடி எடுக்கும் போராட்டம் அறிவித்துள்ளனர்



