புதுக்கோட்டை நகரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எஃப்எல்டு மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில் புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் புதிதாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எஃப்எல்டு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறக்கப்படுவதற்கு முன்பில் இருந்தே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அந்தக் கடைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தான் மாவட்ட நிர்வாகம் அதையெல்லாம் மீறி அசோக் நகர் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எஃப்எல் 2 காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரை செயல்படும் மதுபான கடைக்கு அனுமதி அளித்து தற்போது அந்த கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மதுபான கடையை திறந்ததை கண்டித்தும் புதிதாக திறக்கப்பட்டுள்ள எஃப் 2 மதுபான கடைக்கு எதிராகவும் அசோக் நகரில் திறக்கப்பட்டுள்ள எஃப்எல்டு மதுபான கடையை உடனடியாக மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பாக மாறியது. இதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்ட நிலையில் அங்க குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி காவல்துறையினரின் வாகனத்தில் ஏற்றியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று கட்டாக தூக்கி போலீசார் வாகனங்களில் ஏற்றிய நபர்களை கீழே இறக்கி அதை தொடர்ந்து சமரசம் அடைந்த போராட்டக்காரர்கள் எப்எல்டு மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு உடனடியாக தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகமும் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் திறக்கப்படும் எஃப்எல்டு மது கடைகளை மூட வேண்டும் குறிப்பாக அசோக் நகரில் உள்ள அந்த கடையை மூடாவிட்டால் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்: வீரராகவன்



