தங்கம் வென்ற தலைமை காவலரின் புதல்வி.உமையாழினி, மாநகர காவல் ஆணையர் திரு.ஜெ.லோகநாதன் அவர்களின் பாராட்டுக்கள்.
தங்கம் வென்ற தலைமை காவலரின் புதல்வி.உமையாழினி மாநகர காவல் ஆணையர் திரு.ஜெ.லோகநாதன் அவர்களின் பாராட்டுக்கள்.

கடந்த 06.12.2025 முதல் 09.12.2025 வரை SGFI பள்ளிகளுக்கு இடையேயான தேசிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டு போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றன. இதில் தமிழக அணி சார்பாக, மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில், காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவரும், மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் திரு.ராஜா (த.கா. 3915)என்பவரின் மகளுமாகிய செல்வி.உமையாழினி என்பவர் .177 OPEN SIGHT AIR RIFLE 10 m பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற சிறுமியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ,மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார். காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை ) அவர்கள் உடனிருந்தார்.
publicsocialmedia.in



