17/11/2015 மதிய நேரச் செய்திகள்

17/11/2015  மதிய நேரச் செய்திகள்

  அமெரிக்காவில் இருந்து LPG எரிவாயுவை இறக்குமதி செய்யும் இந்தியா 

இந்தியத் தேவையில் ஆண்டுக்கு 10 சதவீதம் அளவில் LPG எரிவாயு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்து


   ராணிப்பேட்டையில் SIR பணியில் 
ஈடுபட்டிருந்த அதிகாரி மயக்கம்  - மருத்துவமனையில் அனுமதி.


   வீட்டு வேலைக்கு ரூ.1 லட்சம்

Graylabs எனும் AI நிறுவனத்தின் CEO-வான 
அமன் கோயல் என்பவர் தன் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் பணியாளருக்கு ரூ.1 லட்சம் சம்பளம் தருவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமன் கோயல், அவர் மனைவி இருவருமே ஐஐடியில் படித்தவர்கள். ஐடி துறையில் தனி நிறுவனத்தை தொடங்கி அவர்கள் பிஸியாக இருப்பதால், படித்த பெண் ஒருவரை வீட்டு வேலைக்கு நியமித்து அவருக்கு House Manager என பதவி கொடுத்திருக்கிறது இந்த தம்பதி.

  மதுரையில் SIR தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்குவாதம்

இளம் வயது வாக்காளர்களின் படிவங்களை நிராகரிக்கும் நிலையை உருவாக்குவதாக குற்றச்சாட்டு.


       கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில், தனது அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொலை செய்ய உத்தரவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என்பதை உறுதி செய்ததுடன் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்.


      வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.

  ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணையும் 'Thalaivar 173' திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்.


     பீகாரை போலவே தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” 

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கணிப்பு.


     சவுதி அரேபியாவில் இந்தியர்கள் 42 பேர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


      தமிழ் சமூகத்தின் பெருமைமிகு வரலாற்றினை வெளிகொண்டு வரும் வகையில் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் - உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.

   ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு
வன்முறை தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்ததாக மரண தண்டனை விதிப்பு
வன்முறை தீவிரமடைந்ததால் வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.


       *சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நகைப் பட்டறையில் 1.78 கிலோ தங்கக் கட்டிகளை திருடிச் சென்று ஒடிசாவில் பதுங்கியிருந்த 4 பேர் கைது*

ஹரீஷ் என்பவருக்கு சொந்தமான பட்டறையில் வேலை செய்து வந்த நால்வரும், தங்கக் கட்டியுடன், அங்கிருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் திருடிச் சென்றுள்ளனர்

2 தனிப்படைகள் அமைத்து நால்வரையும் தேடி வந்த போலீசார், ஒடிசாவில் வைத்து அவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

  தவெகவினர் வாக்குவாதம்

மதுரையில் SIR தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்குவாதம்

இளம் வயது வாக்காளர்களின் படிவங்களை நிராகரிக்கும் நிலையை உருவாக்குவதாக குற்றச்சாட்டு.


      மக்கள் போராட்டம் 

கரூர் வெண்ணெய்மலை கோவில் நிலத்தில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு

அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் ஆதரவு.

         *உயிரிழப்பு 45 ஆக உயர்வு*

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு

ஐதராபாத்தில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் சென்றவர்கள் பயணித்த பேருந்து விபத்திற்குள்ளானது.

பத்திரிகையாளர் : வீரராகவன்